education

img

பட்டதாரிகளுக்கு SBI -ல் வேலை

பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு 8224 காலியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Junior Associates (Customer Support & sales)

மொத்த காலியிடங்கள்: 8224

சம்பளம்: ரூ.11,765 - ரூ.31,450

வயது: 1.1.2020 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தவர்களுக்கு- 5 வருடம், மாற்றுத்திறனாளிகளுக்கு- 10 வருடம், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு -3 வருடங்கள் வயது வரம்பு சலுகை தரப்படுகிறது.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
SBI வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு Preliminary தேர்வு, Main தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

Preliminary தேர்வு நடைபெறும் மாதம்: பிப்ரவரி/ மார்ச் 2020

Main தேர்வு நடைபெறும் மாதம்: ஏப்ரல் 2020

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், விருதுநகர், பாண்டிச்சேரி.எழுத்துத் தேர்வுக்கான பாடப்பிரிவுகள், மதிப்பெண் விபரங்கள் கீழ்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்
பொது/OBC/EWS/ பிரிவினர்கள் ரூ.750 மட்டும் கட்டணத்தை SBI வங்கி செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
www.sbi.co.in/careers என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.2.2020. Prelimlnary எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை 11.2.2020- ஆம் தேதி முதல் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.