education

img

தமிழக அரசில் உதவி இயக்குனர் மற்றும் திட்ட அதிகாரி பணி

தமிழக அரசின் சமூகநலம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் உள்ள 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Assistant Director
காலியிடங்கள்: 13
சம்பள விகிதம்: ரூ.56,100 - 1,77,500

கல்வித்தகுதி: Home Science/ Psychology/ Sociology/ Child Development/ Food and Nutrition/ Social Work/ Rehabilitation Science பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Child Development Project Officer
காலியிடங்கள்: 87
சம்பளவிகிதம்: ரூ.36,900 - 1,16,600

கல்வித்தகுதி: Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்புடன் Rural Services பாடப்பிரிவில் Gandhigram University-ல் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமான வயதுவரம்பு: 1.7.2019 தேதிப்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
குறிப்பு: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத் தேர்வில் Papper-I மற்றும் Papper-II என இரு கட்டங்களாக நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்: Assistant Director பணிக்கு 16.11.2019 ஆம் தேதியும், Child Development Project Officer பணிக்கு 17.11.2019 ஆம் தேதியும் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம்.

தேர்வுக்கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD/ விதவைகளுக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தேர்வு கட்டண சலுகை பெற விரும்புபவர்கள் இணையதளத்தில் பார்க்கவும். முன்பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.9.2019.