தில்லி அரசின் கல்வித் துறையில் உள்ள 982 Teaching மற்றும் Non-Teaching காலிப்பணியிடங்கள் நிரப்ப்ப்பட உள்ளதால் தகுதியானவர்கள் “Delhi Subordinate Services Selection Board (DSSSB)” மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1. பணியின் பெயர்: Assistant Teacher (Primary/ Nursery)
கல்வித்தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800
2. பணியின் பெயர்: Junior Engineering (Civil)
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் BE/ B.Tech. பட்டம் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800
மொத்த காலியிடங்கள்: 982
தேர்ந்தெடுக்கப்படும் முறை: DSSSB-ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.dsssbonline.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.10.2019 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.