திருப்பூர், ஜன.16- தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சனியன்று தொடங்கப்பட் டது. இந்திய நாடு முழுவதும் ஜன. 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங் கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. குறிப்பாக கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்க ளுக்கு முதற்கட்டமாக தடுப் பூசி போடப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை, தாராபுரம், உடுமலை அரசு மருத்துவமனைகளிலும், பெருமா நல்லூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திலும் சனியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங் கியது. திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வரவழைக்கப் பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ் வொரு மையங்களிலும் 100 பேர் வரை தடுப்பூசி போடப் படும். தடுப்பூசி செலுத்திய பிறகு அவர்களை அந்தந்த மருத்துவ மனையிலேயே 30 நிமிடம் கண் காணிப்பில் வைக்கப்பட்டு, முழு பரிசோதனைக்கு பிறகு அனுப்ப படுவர் என சுகாதாரத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று ஈரோடு, நாமக் கல், சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.