education

img

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
TRB அதிகாரப்பூர்வ இணையதளம் www.trb.tn.gov.in மூலம் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு நவம்பர் 1,2ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு நிர்ணயித்த கல்வித் தகுதி மற்றும் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500; SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து விவரங்களும் முழுமையாகவும் சரியாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி விண்ணப்பதாரர்களுக்கு TRB வேண்டுகோள் விடுத்துள்ளது.