பாரத ஸ்டேட் வங்கி 1422 சிபிஓ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. . விரும்பம் உடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Circle Based Officer (CBO)
பணியிடம்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம், மகாராஷ்டிரம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா
காலியிடங்கள்: 1422
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
வயதுவரம்பு: 30.09.2022 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.11.2022
விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.