கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தில் பார்மஸிட் மற்றும் தோட்டக்கலை உதவியாளர்கள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி வாய்ப்பு குறித்த முழுமையான தகவல்கள் பின்வருமாறு
விளம்பர எண்: 05/2020 | 06/2020
பணி: Pharmacist
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.22,000 - 90,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆயுர்வேத பார்மசி (Ayurveda Pharmacy) பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி:Horticulture Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.22,000 - 90,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முக்கிய பாடப்பிரிவு மற்றும் பொதுஅறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.236 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.486 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2021