சென்னை
வரும் ஜனவரி 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மிக உயரிய தேர்வான இந்த் தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க இந்த தேர்வு மூலம் தேர்வாணையம் புதிய வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வழிகாட்டு நடைமுறைகள் குரூப் 1 தேர்விற்கு மட்டுமல்லாது இனி வரும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் புதிய வழிகாட்டு முறைகள் புகுத்தப்பட்ட உள்ளதால் போட்டித் தேர்வர்கள் கீழ்காணும் அறிவுரைகளை நன்கு கவனித்து கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது.
முக்கிய அறிவுரைகள்:
1.தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு சென்றிருக்க வேண்டும். அதன் பின்னர் வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கு முன்னர் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகக்கத்து.
2.விடைத்தாளில் விடைகளை குறிக்கவும், விபரங்களை பூர்த்தி செய்யவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை பயன்படுத்த வேண்டும். பென்சில் அல்லது பிற நிற பேனாக்களை பயன்படுத்த அனுமதி இல்லை.
3.விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையெழுத்திட்டு, இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். மேலும் மை பதிக்கும் பொழுது விடைத்தாளின் பிற இடங்களில் மை பட்டு சேதமடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
4.வினாத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.
5.தேர்வு விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமை ஆக்கப்பட்டு உள்ளன என்பதை எண்ணி அதன் மொத்த எண்ணிக்கையை அதெற்கென ஒதுக்கப்பட்ட உரிய இடங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இதனை செய்ய தவறினால் தேர்வர் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும். எனவே இதனை தவறாமல் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும்.
6. முக்கியமாக தேர்வர்களுக்கு தேர்வு நேரம் முடிந்த பிறகு, அதாவது 1.00 மணி முதல் 1.15 மணி வரை 15 நிமிடங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.