மருத்துவ முதுநிலை மேற்படிப்புகளுக்கு 488 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில், முதுநிலைப் பட்ட மேற்படிப்புகளுக்கு 488 இடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அடுத்த கல்வியாண்டு முதல் கூடுதல் இடங்கள் நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.