economics

img

மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனங்களில் எல்ஐசி-யை பின்னுக்குத் தள்ளிய எஸ்பிஐ!

புதுதில்லி, ஜூலை 21 - இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி (LIC) நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக இருந்துவந்தது.  இந்நிலையில், சந்தை மதிப்பு (Market  cap) அடிப்படையில் எல்ஐசி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக எஸ்பிஐ வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.  எஸ்பிஐ பங்கு விலை தொடர்ந்து மூன்று  நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் எல்ஐசி நிறுவனத்தை எஸ்பிஐ முந்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் எஸ்பிஐ பங்கு  விலை சுமார் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக செவ்வாயன்று எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு 4 லட்சத்து 53 ஆயி ரம்  கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. மறுபுறம், எல்ஐசி பங்குகள் விலை, தொடர் சரிவால் 4 லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.  எனவே, சந்தை மதிப்பு அடைப்படையில் எல்ஐசி நிறுவனத்தை முந்தி, மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக எஸ்பிஐ வங்கி உருவெடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எஸ்பிஐ பங்குகள் விலை 17 சத விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே வாரத் தில் எஸ்பிஐ பங்கு விலை 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  அதேநேரம் கடந்த ஒரு வாரத்தில் எல்ஐசி பங்குகள் விலை சுமார் 4 சதவிகிதம் சரிந்துள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி,  எல்ஐசி பங்குகளை கடந்த மே 17-ஆம் தேதி  மோடி அரசு பங்குச் சந்தையில் நுழைத்தது.  மே 22-ஆம் தேதியன்று எல்ஐசி பங்குகளை விற்பனைக்கும் பட்டியலிடப்பட்டது. அப் போது முதல் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம்  கோடி ரூபாய் சந்தை மதிப்பை எல்ஐசி இழந்த துதான் மிச்சம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.எஸ்பிஐ வங்கியோ, இதே காலகட்டத்தில் சந்தை மதிப்பில் 36 ஆயிரத்து 367 கோடி ரூபாயை அதிகரித்துக் கொண்டுள்ளது.

;