economics

img

அக்டோபர் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் சரிவு

இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதத்தின் மொத்த விலைக் பணவீக்கம் (WPI) 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், அக்டோபர் மாதம், 8.39 சதவிகிதமாக குறைந்துள்ளது. மார்ச் 2021க்குப் பிறகு தற்போது குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 10.7% ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொத்த விலை பணவீக்கம் 13.83% ஆக இருந்தது. 
கனிம எண்ணெய்கள், உலோகங்கள், ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் குறைவதற்கு முக்கிய காரணம் என ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

;