economics

மொத்த விலைப் பணவீக்கம் 15.88 சதவிகிதத்தை எட்டியது!

புதுதில்லி, ஜூன் 15 - நாட்டின் மொத்த விலைப் (Wholesale Price Index - WPI) பணவீக்கம், இதுவரை இல்லாத அளவிற்கு 2022 மே மாதத்தில் 15.88 சதவிகித மாக அதிகரித்துள்ளது. 2011-12 ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை கணக்கிடும் புதிய நடைமுறை தொடங்கியதற்குப் பின்னர், தொடர்ந்து 2-ஆவது மாதமாக மொத்த விலைப் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பாக, பழைய நடைமுறை கணக்கீட்டின்படி 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 16.06 சதவிகிதம் என்ற அளவிற்கு போயி ருந்தது. அதன்பிறகு, நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியில்தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 15.08 சதவிகிதம் என்ற மிகமோசமான நிலையைத் தொட்டது. இந்நிலையில்தான், 2022 மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் 15.88 சதவிகிதம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.  கடந்த 2021-ஆம் ஆண்டின் மே மாதத்தில், மொத்த விலைப் பணவீக்கம் 13.11 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது. இது ஓராண் டில் 2.77 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

முந்தைய 2022 ஏப்ரல் மாதத்தில் 15.08 சத விகிதம் என்ற அளவில் இருந்த மொத்தவிலைப் பணவீக்கம், ஒரே மாதத்தில் 80 புள்ளிகள் அதி கரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மொத்த விலைப் பணவீக்கம் தொடர்ந்து 14-ஆவது மாதமாக இரட்டை இலக்கத்தில் ஏற்றம் கண்டு வருகிறது.  விலைவாசி உயர்வு காரணமாகவே பண வீக்கம் அதிகரித்துள்ளது என்றாலும், முக்கிய மாக காய்கறிகளின் விலையேற்றமே மொத்த விலைப் பணவீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், காய்கறிகளின் விலையேற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 23.24 சதவிகிதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 56.36 சதவிகி தமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருள் பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 8.88 சத விகிதமாக இருந்தது, மே மாதத்தில் 10.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  எரிபொருள் & மின்சாரம் எரிபொருள் மற்றும் ஆற்றல் துறையில் மொத்த விலை பண வீக்கமானது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 38.66 சதவிகிதமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 40.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  அதேபோல, மினரல் ஆயில், பெட்ரோலி யம் & இயற்கை எரிவாயு, உணவு அல்லாத பொருட்கள், கெமிக்கல்கள், கெமிக்கல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களின் விலையேற்ற மும் மொத்த விலைப் பணவீக்கத்திற்கு முக்கி யக் காரணமாக அமைந்துள்ளது.

;