economics

img

பிஎஸ்என்எல் உடன் டிசிஎஸ் கூட்டணி...!

டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும் எனப் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் கூட்டணியில் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் 4ஜி நெட்வொர்க் அமைக்கப்பட உள்ளது. 

ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா கடந்த வாரம் மக்களவையில் இந்திய மக்களுக்கு 4ஜி டெலிகாம் சேவையை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 4 ஜி நெட்வொர்க் அளிக்க பிஎஸ்என்எல் நாட்டின் முக்கியமான பகுதிகளில் முதற்கட்டமாக 6,000 டவர்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும், மீதமுள்ள 1.06 லட்சம் டெலிகாம் டவர்களை அடுத்தடுத்து நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த முதல் 6000 4ஜி டெலிகாம் டவர்ளை அமைக்கும் 550 கோடி ரூபாய் திட்டத்தை டிசிஎஸ் தலைமையலான நிறுவனங்கள் அடங்கிய குழு கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

4ஜி சேவையில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அறிமுகத் திட்டம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

;