economics

img

2025-க்குள் மேலும் 25 விமான நிலையங்கள் தனியார்மயம்!

புதுதில்லி, டிச.14- 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 25 விமான நிலை யங்களைத் தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அண்மையில் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசாங்க சொத்துக்களை தனியா ருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் ரு. 6 லட்சம் கோடி நிதி திரட்டப்போவதாக ஒன்றிய பாஜக அரசு அண்மையில் அறிவித்தது. அதன் ஒருபகுதியாகவே, நாக்பூர், வாரணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயம்புத் தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள 25 விமான நிலையங் களை தனியார்மயமாக்க உள்ளதாக அமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.

தனியார்மயமாக்கப்படும் விமான நிலையங்களின் பட்டியலில், மதுரை, திருப்பதி, ராஞ்சி, ஜோத்பூர், ராய்ப்பூர், ராஜமுந்திரி, வதோதரா, அமிர்தசரஸ், சூரத், ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய் பூர், போபால் மற்றும் விஜயவாடா விமான நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமா னோர் பயணம் செய்யும் அனைத்து விமான நிலையங்களையுமே தனியார் மயமாக்கி விடுவதுதான் அரசின் திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். 2020-21 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுப் பரவலால் நாட்டில் உள்ள 136 விமான நிலையங்களில் 133 நிலை யங்கள் பெரிய இழப்பை சந்தித்ததாகவும், இந்தியாவில் உள்ள 136 விமான நிலை யங்களுக்கான வருவாய்த் தரவுகளின்படி 2020-21-இல் மொத்தமாக ரூ.2,882.74 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், கண்டாலா, கான்பூர் சாகேரி, பரேலி மற்றும் போர்பந்தர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

;