அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவினை கண்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.77 ஆக சரிவடைந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.10 மணியளவில் ரூபாயின் மதிப்பானது 77.28 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் 0.48% வீழ்ச்சியினை கண்டுள்ளது.
ரூபாயின் மதிப்பானது இன்று காலை தொடக்கம் முதலே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதிகபட்சமாக 77.42 ரூபாய் வரையில் சரிவினைக் கண்டது.
கடந்த மே 7, 2022 அன்று அதிகபட்சமாக 76.98 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இன்று 77 ரூபாயினையும் தாண்டி வீழ்ச்சி கண்டுள்ளது