economics

img

இந்தியாவில் தொடர்ந்து 9 ஆவது வாரமாக அந்திய செலாவணி இருப்பு சரிவு... 

இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்ந்து 9 ஆவது வாரமாக சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இந்தியாவில் இறக்குமதியில் 50 சதவிகிதத்திற்கும் மேல் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் பங்குதான் உள்ளது. அப்படி இறக்குமதி செய்யும் போது டாலர்கள் மூலம் தான் பணத்தைச் செலுத்த வேண்டும். எனவே இந்தியா எப்போதும் குறிப்பிட்ட அளவில் அந்திய செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும். 

இந்நிலையில், இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முடிவடைந்த வாரத்தில் 1.77 பில்லியன் டாலரிலிருந்து 595.95 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது. 

அதற்கு முந்தைய வாரம் 2.695 பில்லின் டாலரிலிருந்து 597.728 பில்லியன் டாலராக அந்திய செலாவணி இருப்பு சரிந்துள்ளது. ஆர்பிஐ ஒவ்வொரு வார இறுதியிலும் 600 பில்லியன் டாலருக்குக் குறைவாக அந்நிய செலாவணி இருப்பு செல்லாதவாறு பார்த்துக்கொள்ளும். 

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து 78.24  ரூபாயாக உள்ளது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாகச் செலவாகத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் இந்தியாவில் அந்திய செலாவணி தொடர்ந்து சரிய காரணமாக உள்ளது. 

மேலும், அமெரிக்கா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, இந்தியாவிலிருந்து அந்திய முதலீடுகள் பெரும் அளவில் சரிந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 28.05 பில்லியன் டாலர் வரை அந்திய செலாவணி இருப்பு குறைந்துள்ளது. 

இந்தியாவின் அந்திய செலாவணி இருப்பு 2021 செப்டம்பர் 3 ஆம் தேதி 642.453 டாலராக இருந்தது. அதுவே 2022 மே 9 ஆம் தேதி இந்த ஆண்டின் குறைந்தபட்ச இருப்பாக 595.95 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 

அதே நேரம் தங்கம் இருப்பு 1.35 மில்லியன் டாலரிலிருந்து 41.739 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் அந்திய செலாவணி இருப்பு நிலை மே 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11 பில்லியன் டாலரிலிருந்து 4.990 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.