economics

img

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்- மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தை இன்று கடுமையாக சரிந்தது.

காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீதும் தாக்குதலை நடத்தியது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ஈரான் ராணுவ கமாண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,002.09 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.22 மணி நிலவரப்படி 1,139.06 புள்ளிகள் குறைந்து 83,127.23 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353.85 புள்ளிகள் குறைந்து 25,443.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் வீழ்ச்சியைத் தொடர்ந்து இன்றும் கடும் வீழ்ச்சியை சந்துள்ளது குறிப்பிடத்தக்கது.