திங்கள், மார்ச் 1, 2021

economics

img

இந்திய வங்கிகளில் ரூ. 1.5 லட்சம் கோடி என்ஆர்ஐ சேமிப்பு குறைந்தது? கொரோனாவால் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பிய 8 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள்....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் சுமார் 12 கோடிபேர் வேலையிழப்புக்கு உள்ளாகினர். இந்தக் காலத்தில், மாதச் சம்பளக்காரர்கள் மட்டும் சுமார் 1 கோடியே89 லட்சம் வேலையிழந்தனர். பின்னர் பொதுமுடக்கத் தளர்வுகள் காரணமாக வேலைவாய்ப்பு படிப்படியாக மேம்பட்டாலும், கொரோனாவுக்கு முந்தைய இயல்பான நிலையைஇன்னும் எட்டவில்லை. சுமார் 68 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் முற்றிலுமாக வேலையிழந்து விட்டதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது உள்ளூர் நிலவரமென்றால், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தஇந்தியர்களும், கொரோனா காரணமாக வேலையிழந்து தாய்நாட்டுக் குத் திரும்பியுள்ளனர்.குறிப்பாக, குவைத்தை எடுத்துக்கொண்டால், அங்கு சுமார் 10 லட்சம்இந்தியர்கள் வசித்து வந்தனர். இவர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 5.52 லட்சம் பேர் (70 சதவிகிதம்) வேலை இழந்து கேரளம் திரும்பியுள்ளதாக இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏடு தெரிவிக்கிறது.ஒட்டுமொத்தமாக, கொரோனா தொற்றுப் பாதிப்பைத் தொடர்ந்து, குவைத்தில் பணியாற்றிவந்த 10 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர்வேலையிழந்து, சொந்த நாட்டுக்குத்திரும்பிவிட்டனர். இதுதவிர, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு மட்டும்மே 2020 முதல் 2021 ஜனவரி 4 வரைசுமார் 8.43 லட்சம் பேர் திரும்பியுள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் 1.40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்; 2.08 லட்சம் பேரின் விசா, ஒர்க் பெர்மிட் போன்றவை காலாவதியாகி இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், இவ்வாறு பணியிழந்தவர் வெளிநாடு வாழ்இந்தியர்களால் (NRI), இந்திய வங்கிகளில்ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் டெபாசிட் தொகையும் கணிசமாக குறைந்து விட்டதாகதற்போது புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இந்தியவங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் கடந்த ஆண்டு 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது நடப்பாண்டில் 4.7 லட்சம் கோடி ரூபாயாக சரியும் என்று உலக வங்கி கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளிலிருந்து வரும் டெபாசிட் தொகையில் 23 சதவிகித டெபாசிட் இழப்பை - சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி சேமிப்புத் தொகையை, இந்திய வங்கிகள் இழந்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.ஆறுதல் அளிக்கும் விஷயமாக, தாய்நாடு திரும்பியவர்கள் மூலம் நிலையான வைப்புத்தொகையில் மட்டும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கேரளத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு மாதமும், எஸ்பிஐவங்கியின் என்ஆர்ஐ வைப்புத் தொகையில் ரூ. 300 கோடி அதிகரித்து இருப்பதாகவும் அந்த வங்கியின் துணைப்பொதுமேலாளர் (என்ஆர்ஐ செல்) அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

;