வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 6.25% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம், தற்போது 25 புள்ளிகள் உயர்த்தி 6.50% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 9 மாதங்களில் 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
மேலும், 2023-24 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதமாகவும், சில்லறை பணவீக்கம் 2023-24ஆம் ஆண்டில் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.