economics

img

பொருளாதார மந்த நிலைக்குள் இந்தியா நுழைந்தது... ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும் மைனஸ் 7.5 சதவிகிதமாக ஜிடிபி வீழ்ச்சி

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் முதலே இந்தியாவின் பொருளாதாரம் சரியத்துவங்கி விட்டது. ஜிஎஸ்டி அமலாக்கம் அதனை அதிகப்படுத்தியது. கொரோனா காலப் பொதுமுடக்கம், பொருளாதாரத்தை படுமோசமான நிலைக்குத் தள்ளி விட்டது.

அந்த வகையில், 2020-21 நிதியாண்டின்முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் (NSO)அறிக்கை வெளியிட்டது.கடந்த 1996-ஆம் ஆண்டிற்குப் பின், மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியாக இதுபார்க்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, 2020 -21 நிதியாண் டின் இரண்டாவது காலாண்டிலும் (ஜூலை - செப்டம்பர்) பொருளாதார வீழ்ச்சி தொடரும் என கணிப்புகள் வெளியாகின. குறிப்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி மைனஸ் 8.6 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியது.இவ்வாறு நடக்கும் பட்சத்தில், இந்தியாபொருளாதார மந்த நிலைக்குள் (Recession) நுழையும் எனவும் அது எச்சரிக்கை செய்தது.நடப்பு 2020 - 21 நிதியாண்டின் முதல் பாதியில்இந்தியா ஒரு தொழில்நுட்ப மந்தநிலையைஅதன் வரலாற்றில் முதல் முறையாக (Historic Technical Recession) சந்திக்கும்என்று பல்வேறு பொருளாதார அறிஞர்களும்கூறினர்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால், அந்த நாடு, பொருளாதார மந்த நிலைக்குள் (recession) நுழைந்துள்ளதாக பொருள் கொள்ளப்படும்.இந்நிலையில்தான், ரிசர்வ் வங்கி மற்றும்பொருளாதார அறிஞர்களின் அந்த கணிப்புகள் துரதிர்ஷ்டவமாக தற்போது உண்மையாகி இருக்கின்றன.எதிர்பார்த்தபடியே இந்தியா அதிகாரப்பூர்வமாக பொருளாதார மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது.

அதாவது, ஏப்ரல் - ஜூன் முதல் காலாண்டைத் (Q1FY21) தொடர்ந்து, ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டிலும் (Q2FY21) இந்தியா பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation- MoSPI) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி விகிதத்தை மத்திய புள்ளியல் அலுவலகம் (The National Statistical Office -NSO) வெளியிட்டுள்ளது. அதில், முதல்காலாண்டில் மைனஸ் 23.9 சதவிகித ஜிடிபி வீழ்ச்சியைக் கண்ட இந்தியப் பொருளாதாரம், இரண்டாவது காலாண்டிலும் மைனஸ் 7.5 சதவிகிதம் என்ற அளவிற்கானபொருளாதார வீழ்ச்சியில் தொடருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.2020-21 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ. 33.14 லட்சம் கோடி என்று மதிப்பிட்டுள்ள என்எஸ்ஓ, இதுவே, 2019-20 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 35.84 லட்சம் கோடியாக இருந்ததாகவும், தற்போது மைனஸ் 7.5 சதவிகித வீழ்ச்சியைஜிடிபி சந்தித்து இருப்பதாகவும் குறிப்பிட் டுள்ளது.கடந்தாண்டு இதே காலாண்டில்- குறைந்த அளவுதான் என்றாலும் கூட, 4.4 சதவிகிதம் என்ற வளர்ச்சிக் குறியீட்டில் ஜிடிபிஇருந்தது. ஆனால், தற்போது மைனஸ் 7.5 சதவிகிதம் என்று வீழ்ச்சிக்கு போயிருப்பதாக தெரிவித்துள்ளது.

அடிப்படை தொழில்கள் 2.5 சதவிகிதம் வீழ்ச்சி
கடந்த 2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8 அடிப்படைத் தொழிற் துறைகள் (Core Sector) மைனஸ் 5.5 சதவிகித வீழ்ச்சியில் இருந்தன. தற்போது இவைமைனஸ் 2.5 சதவிகிதம் என சற்று குறைந்திருந்தாலும், வீழ்ச்சி தொடருவதாக என்எஸ்ஓஅறிக்கை கூறுகிறது.நிலக்கரித்துறை மைனஸ் 11.6 சதவிகிதம், கச்சா எண்ணெய் மைனஸ் 6.2 சதவிகிதம், இயற்கை எரிவாயு மைனஸ் 8.6 சதவிகிதம், சுத்திகரிப்புப் பொருட்கள் மைனஸ் 17.0 சதவிகிதம், எஃகு துறை மைனஸ் 2.7 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ச்சி கண்டுள்ளன.உரங்கள் (6.3%), சிமெண்ட் (2.8%), மின்சாரம்(10.5%) ஆகிய துறைகள் மட்டுமே வளர்ச்சிகண்டுள்ளன.

கடுமையாக அதிகரித்த நிதிப்பற்றாக்குறை
2020-21 பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 7.96 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது 9.53 லட்சம் கோடி ரூபாயாகி உள்ளது. ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை 119.7 சதவிகிதம் அதிகரித்து உள்ளது என்று என்எஸ்ஓ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;