புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்க பாதிப்புகளை சரிசெய்யவும், தொழில்களை மீட்டெடுக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு கட்ட பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகளை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியிட்டனர். இதன் மொத்த மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்பட்டது.
எனினும், இவற்றால் ஏழை மக்களுக்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லை என்று அப்போதே விமர்சனங் கள் எழுந்தன. பொதுமுடக்கத்தால் கோடிக்கணக்கானோர் வேலையையும், வருவாய் இழப்பையும் சந்தித்துள்ள நிலையில், பொருளாதார சுழற்சியை ஏற் படுத்துவதற்கு மக்களின் கையில் நேரடியாக பணத்தைக் கொடுக்க வேண்டும்என்று பொருளாதார அறிஞர்கள் கூறினர். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், ஒவ் வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 ரொக்கமாகவழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அதற்கான போராட்டங் களையும் நடத்தினர். ஆனால், சிறப்புத் திட்டம் என்ற பெயரில், புளுத்துப்போன அரிசியை ரேசனில் வழங்கியதோடு மோடி அரசுதனது கடமையை முடித்துக் கொண்டது.இவ்வாறு மக்களுக்கென எந்த செலவையும் செய்யாத நிலையில்தான், நடப்பு நிதியாண்டின் கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் மத்திய அரசின் செலவினங்கள், மொத்த வருவாயில் 2.4 மடங்கு (240 சதவிகிதம்) அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.2019-ஆம் ஆண்டின், ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் அரசுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் வந்த நிலையில், அதைக்காட்டிலும் 177 சதவிகிதம் அதிகமாக- 16 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போதைய 2020-ஆம்ஆண்டின் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில், வரி, வரி அல்லாத வருவாய் மற்றும் மூலதன ரசீதுகள் மூலம் அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கே வருவாய் வந்துள்ளதாகவும், அதேநேரம்செலவு ரூ.16 லட்சத்து 61 ஆயிரம் கோடியாக (240 சதவிகிதம்) அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2019-20 கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், உணவு மானியமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 788 கோடிரூபாய் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் உணவுக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 203 கோடிரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப் பட்டு உள்ளது. கடந்தாண்டை விட 18.94சதவிகிதம் மானியம் குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 35.02 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டில் 29 ஆயிரத்து 840 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2020-இல் 19 ஆயிரத்து 391 கோடியாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது.ஊட்டச்சத்து அடிப்படையிலான உரங்களுக்கான (Nutrient based fertilizers) மானியமும்கூட முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில்38.70 சதவிகிதம் குறைக்கப்பட்டுள் ளது. 2019-இல் 20 ஆயிரத்து 873 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2020-இல் 12 ஆயிரத்து 795 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகவே கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-இல் சுமார் 18.23 சதவிகிதம் அளவிற்கான மானியங்களை மோடி அரசுவெட்டிச் சுருக்கியுள்ளது. 2019-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 724 கோடி ரூபாய் மானியமாக வழங் கப்பட்டிருந்தது. ஆனால், 2020-இல் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 கோடி ரூபாய்தான் வழங்கியுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த செலவினமும் கடந்த ஆண்டை காட்டிலும் 0.4 சதவிகிதம் குறைவாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளது.அதாவது, கொரோனா காலத்தில் மக்களுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கி எந்த செலவுகளையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, கடந்த ஆண்டு வழங்கிய மானியத்திலும் 18.23 சதவிகிதத்தை வெட்டியுள்ளது.எனினும், கடந்த ஆண்டைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் அரசின்செலவினம் 240 சதவிகிதம் அதிகரித் துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசுக்கான வருவாய் இழப்பு, இங்கு கூடுதல் செலவினமாக காட்டப்பட்டுள்ளது.