economics

img

பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஜனநாயகம் தடையாக உள்ளது... நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் சொல்கிறார்

புதுதில்லி:
கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, இந்தியாவின்அதிகபட்ச ஜனநாயகம் தடையாக இருக்கிறது என்று ‘நிதிஆயோக்’ அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் பேசியுள்ளார்.சுவராஜ்யா இதழ் ஏற்பாடுசெய்த ‘தி ரோட் டூ ஆத்ம நிர்பர்பாரத்’ (The Road to Atmanirbhar Bharat) என்ற ஆன் லைன் கருத்தரங்கில்தான் இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

“சுரங்கம், நிலக்கரி மற் றும் விவசாயம் போன்ற துறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள் ளது. இதேபோல பலதுறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. குறிப்பாக, மாநில அரசுகளிடமிருந்தும் சீர்திருத்தங்கள் வரவேண்டும்.உற்பத்தியுடன் இணைந்த சலுகைத் திட்டத்திற்காக, அரசு, 10 முக்கியத் துறைகளை அடையாளம் கண்டுள் ளது. இந்தத் துறைகள், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் முக்கியப்
பங்கு வகிக்கும். கடுமையானபொருளாதார சீர்திருத்தங் களை மேற்கொள்ளாமல், சீனாவுடன் நாம் போட்டியிட முடியாது.ஆனால், இந்தியாவில் கடுமையான சீர்திருத்தங் களை மேற்கொள்ள, அதிக அரசியல் அழுத்தங்களை கடந்துவர வேண்டியுள்ளது. கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற் கொள்வதற்கு, இந்தியாவின் அதீத ஜனநாயகம் தடையாக இருக்கிறது” என்று அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளார்.

;