districts

img

குடியிருப்பில் மின்சாரம் துண்டிப்பு வடமாநில தொழிலாளர்கள் அவதி

செங்கல்பட்டு, ஆக 18- பிஎஸ்எல் தொழிற் சாலை வளாகத்திற்குள் தொழிலாளர்கள் குடியிருப்பில் மின்சாரத்தை துண்டித்ததால் அடிப்படை வசதிகள் இல்லாமல் வட மாநிலத்தைச் சார்ந்த   தொழிலாளர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த வையாகூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிஎஸ்எல் என்கிற  நிறுவ னம் செயல்பட்டு வந்தது.  இந்நிறுவனத்தில் வீராணம்  ஏரியில் இருந்து சென்னை க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மிகப்பெரிய  குழாய்களை தயார் செய்து வந்தனர். இந்த தொழிற் சாலையில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வந்தனர். இதில்  50க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஒடிசா, மேகால லயா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் தொழிற்சாலை வளாகத் திற்குள் உள்ள குடியிருப்பில்  தங்கி பணி செய்து வந்துள் ளனர். இந்நிலையில் தொழிற் சாலை கடந்த மே மாதம் முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டது. மேலும் அங்கு பணி செய்து வந்த தொழிலாளர்களுக்கு எட்டு  மாத ஊதியம் வழங்கப் படாமல் இருந்து வந்தது. இப்பிரச்சனையில் சிஐடியு தலையிட்டு ஆர்ப்பாட்டம், உண்ணா உள்ளிட்ட  பல்வேறு போராட்டங்கள் நடத்தியப் பின்னர் தொழிலாளர் நலத்துறை தலையிட்ட பின்னர் நிர்வா கம் 7 மாத ஊதியத்தை வழங் கியுள்ளது. இந்நிலையில் ஆலை நிர்வாகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய  ஊதியம் மற்றும் பணப் பயன்களை வழங்காமல் குடியிருப்பை காலி செய்திட வலியுறுத்தி வரு கிறது. மேலும் தங்கள்  குடியிருப்பில் மின்சாரத் தையும் நிர்வாகம் துண்டித் திருப்பதால், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பிரச்சனையில் தமிழக அரசு, மாவட்ட நிர்வா கம், தொழிலாளர் நலத்துறை  தலையிட்டு உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம்  மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிட நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என சிஐடியு செங்கல்பட்டு மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

;