districts

img

சாலையில் மாடுகள் திரிந்தால் கோசாலையில் ஒப்படைக்கப்படும்

செங்கல்பட்டு, அக். 14- மறைமலைநகர் நக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றினால் அதனை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக மறைமலைநகர் நக ராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள உள்ள அறிவிப்பில் கூறியி ருப்பதாவது:   மறைமலைநகர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மாடுகள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரி வதால் தொடர் விபத்து கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்க ளிடம் இருந்து தினசரி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. மாடுகள் சாலையின் நடுவே குறுக்கு நெடுக்காக செல்வதாலும் துள்ளிக் குதித்து மிரண்டு ஓடு வதாலும் சாலை விபத்து கள் ஏற்படுகிறது. இதனால் உயிர் பலி நிகழ்கிறது. இதை தடுக்கும் வித மாக மாடுகளின் உரிமை யாளர்கள் தங்களது மாடுகளை தங்களது இருப்பிடத்தில் வைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை நக ராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு அருகிலுள்ள கோசாலைகளில் விடப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;