districts

img

பழங்குடியினருக்கு பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கம் பேரணி

செங்கல்பட்டு, ஏப் 25 – செங்கல்பட்டு மாவட்டத்திற் குட்பட்ட திருப்போரூர், திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு ஆகிய வட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பழங்குடியின இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா, வழங்கப்படாததால் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக  இருக்க இருப்பிடம் இன்றி  வாழ்ந்து வருகின்ற னர். குடிமனை  மற்றும் பட்டா இல்லாத தால் அரசு தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு உள்ளிட்டவைகள் பெற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில்  தமிழக முதலமைச் சரின்  அரசாணையின் படி பழங்குடி இருளர் மக்கள் மற்றும் நரிக்குறவர்  இன மக்களை முழுமையாக  கணக்கெடுப்பு நடத்தி குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர்  அடையாள அட்டை  ஆகிய அடிப்படை  தேவைகளை தடையின்றி வழங்கிட வேண்டும், நரிக்குறவர்  இன  மக்களை பழங்குடியினர்  பட்டியலில் சேர்த்திட வேண்டும், பழங்குடி இருளர் மக்களுக்கு கட்டப்படும்  பசுமை வீடுகளுக்கு ரூ.6 லட்சமாக உயர்த்திட வேண்டும், அரசு மற்றும்  பொதுத்துறை நிறுவனங்களில்  உள்ள பழங்குடியினர் பின்னடைவு காலி பணியிடங்களை  உடனடியாக நிரப்பிட வேண்டும், படித்த இருளர்  மக்களின்  பிள்ளைகளுக்கு முன்னு ரிமை  அடிப்படையில்  நேரடியாக  வேலைவாய்ப்பு  வழங்கிட வேண்டும், பழங்குடி இருளர்  மக்களுக்கு  கட்டிக் கொடுக்கும்  வீடுகளை தரமான தாக கட்ட வேண்டும்,  இடியும்  நிலையில் உள்ள  தொகுப்பு வீடுகளை   அய்வு செய்து  இடித்துவிட்டு  புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை பேரணி  ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் கே.சி.முருகேசன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட செயலாளர் எம்.அழகேசன், விச மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், விதொச மாவட்டச் செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஸ்தாபகரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளருமான பி.சண்மு கம் பேசினார். முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அ.ர.ரா குல் நாத்திடம் சங்கத்தின் நிர்வாகி கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை  வழங்கி னர்.