districts

img

திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: வேலூர் டிஐஜி அறிவுரை

வேலூர், பிப். 26- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான உடற்பயிற்சி முகாமை டி.ஐ.ஜி. ஆனி விஜயா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உங்களை ரசிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். குடும்பம், வேலை, உலகத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார். வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவலர்களுக்கு உடற்பயிற்சி முகாம் நடத்த டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.