districts

பலவன்சாத்து பகுதி மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குக வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்

வேலூர் டிச 11 - வேலூர் மாநகராட்சி 3-வது மண்ட லத்திற்குட்பட்ட பலவன்சாத்து பகுதியில் 250 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நவ 30 தேதியில் கையொப்பமிட்ட நோட்டீஸ்  டிச 7 அன்று அவ்வீடுகளுக்கு அளித்து 7  நாட்களுக்குள் காலி செய்ய வேண்டு மெனவும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை அகற்றி கொள்ள வேண்டும். மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டால் பொருட்கள் திருப்பி தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் வேலூர் தாலுக்கா குழு (தெற்கு) செயலாளர் எஸ்.செல்வி தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளியன்று டிச 9 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து மாநகராட்சி ஆணையரை சந்தித்து வீடுகளை இடிக்கும் நடவடிக்கைைய கைவிட  வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.  இதுகுறித்து சிபிஎம் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில்  பலவன்சாத்துகுப்பம் பகுதியில் 250 குடும்பங்கள்  சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாக உள்ள நிலையில் திடீரென  ஒட்டுமொத்தமாக காலி செய்ய சொன்னால்  வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். மேலும் ஏரி வரத்து கால்வாய்கள் முற்றிலும் தூர்ந்து போய், தண்ணீர் வரத்து இல்லாததோடு, மழைக்காலத்தில் இந்த வீடுகளுக்கு எவ்வித வெள்ள பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே வீடுகளை  இடிக்கும் நடவடிக்கையை கைவிட்டு அனைத்து வீடுகளுக்கும் இடத்தை வகை மாற்றம் செய்து அம்மக்கள் வசிக்கும் வீடு களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

;