districts

img

பெண் ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படும் கிராம வங்கி விருதுநகர் மண்டல மேலாளருக்கு கண்டனம் வங்கி முன்பு ஊழியர்கள், மாதர் சங்கம் போராட்டம்

விருதுநகர், பிப்.9- தமிழ்நாடு கிராம வங்கியின் விருதுநகர் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருபவர் கந்தசாமி. இவர் தொடர்ந்து பெண் ஊழி யர்களுக்கு விரோதமான நட வடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன், தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோ ஷியேஷன் மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்  பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு கிராம வங்கியி மண்  டல மேலாளர் கந்தசாமி, பெண்  ஊழியர்கள் வேலை பார்க்கும் கிளைகளுக்கு ஆய்வுக்குச் சென்று அவர்களை மணிக்கணக்கில் நிற்க வைத்து பேசுவது. மேலும், அங்குள்ள சிசிடிவி ரெகார்டிங்கை ஆய்வு செய்வது. ”சொன்னபடி வேலை பார்க்கவில்லை என்றால் அசிங்கப்படுத்தி விடுவேன்” என  மிரட்டுவது. தங்களோடு பணி புரிந்த ஒரு மேலாளருக்கு இன்  னொரு பெண் மேலாளர் பணி ஓய்வு விழா நடத்த முயன்றபோது, அதை  தகாத வார்த்தைகளால் வாட்ஸ் அப்பில் கிண்டல் அடித்து பதி விட்டுள்ளார்.  மேலும், கர்ப்பிணியான பெண்  ஊழியரை பழிவாங்கும் நோக்கத்து டன் வேறு ஊருக்கு மாற்றம் செய்  துள்ளார். தனது நிலையை விளக்  கிய போதும், அதை ஏற்க வில்லை. இதனால், கடுமையான மன அழுத்தத்தில் பெண் ஊழிய ருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் ஊழி யர் மருத்துவ விடுப்பு விண்ணப்பித்  துள்ளார். ஆனால், மண்டல மேலா ளர் ஆப்செண்ட போட்டுள்ளார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர், தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மன், மாநில மக ளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் ஆகிய வற்றிற்கு புகார் மனு அனுப்பி யுள்ளார். இந்தநிலையில், விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் மண்டல அ;லுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி, பரிதிராஜா ஆகியோர் தலைமையேற்றனர். கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜா.மாதவராஜ், சிஐடியு தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், போஸ் பாண்டியன், மாரிக்கனி ஆகியோர் பேசினர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்  னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி கண்டன உரை யாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;