districts

அனுமதியின்றி பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதாக விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

விருதுநகர், மே 31- விருதுநகர் நகராட்சிக்கு உட்  பட்ட பகுதிகளில் தனி நபர் ஒரு வர் அனுமதியின்றி பாதாளச்சாக் கடை வீட்டு இணைப்புகள் வழங்கு வதாகவும், அந்நபர் மீது நடவ டிக்கை வேண்டுமென உறுப்பினர் கள் சரமாரியாக புகார் தெரிவித்த னர். விருதுநகர் நகராட்சிக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாத வன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சையது முஸ்தபா கான், துணைத் தலைவர் தனலட் சுமி, பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: கல்யாண மண்ட பத்தில் இருந்து கறிக் கழிவுகளை பாதாளச் சாக்கடைக்குள் விட்ட தால் அடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால், பொது மக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டதாகவும் திமுக  உறுப்பினர் இந்திரா புகார் தெரி வித்தார். கறிக் கழிவுகள் பாதாள சாக்க டைக்குள் வராமல் இருப்பதற்கும் சம்மந்தப்பட்ட மண்டபம் மீது நட வடிக்கை எடுக்கவும் சுகாதார பிரி வினருக்கு தலைவர் உத்தரவிட்டார். எஸ்.எம்.ஜி நகராட்சி பள்ளி வரும் ஜூன் 13ல் தொடங்க உள்ள நிலையில், பலமுறை தெரிவித்தும் ஏன்? அங்கு சமையல் கூடம் கட்ட வில்லை என்று சுயேட்சை உறுப்பி னர் முத்துலட்சுமி கேள்வி எழுப்பிய தோடு, உடனடியாக கட்டித் தர  வேண்டுமென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே, இருந்த சமையல் கூடத்தை ஒப்பந்தகாரர் ஏன்  இடித்தார்? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு, திமுக உள்ளிட்ட பல  உறுப்பினர்கள் அவருக்கு ஆதர வாக குரல் எழுப்பியதோடு, இந்த  கூட்டத்தின் பொருளில் சமையல் கூடம் கட்ட பொருளை சேருங்கள் என அனைவரும் கேட்டுக் கொண்ட னர். இதையடுத்து, அவர் போராட் டத்தை கைவிட்டு மீண்டும் இருக் கையில் அமர்ந்தார்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்
திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகளை ,முன்பு நக ராட்சி சேவைக் கட்டணம் வசூ லித்து அகற்றி வந்தது. தற்போது, அவ்வாறு செய்யாத காரணத்தால், குப்பைகள் பல்வேறு இடங்களில் தேங்கி கிடப்பதாக சிபிஎம் உறுப்  பினர் ஜெயக்குமார் புகார் தெரி வித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், அவ்வாறு செய்தால் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். பணம் கட்ட  மண்டப நிர்வாகத்தினர் தயாராக உள்ளனர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய ஆணையாளர், தூய்மை இந்தியா திட்டத்தில் பெரிய நிறுவனங்கள், மண்டபங்கள், தாங்களாகவே குப்பைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என விதிகள் உள்ளதாக வும், மண்டபத்தினர் அனைவரும் சேர்ந்து ஒரு இடத்தை வாங்கி,  அதில் குப்பைகளை கொட்டி மக்கிப் போகும் படி செய்தல் வேண்டும் என தெரிவித்தார்.

கௌசிகா ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
கௌசிகா ஆற்றில் நகராட்சி பகு தியில் உள்ள ஒரு பகுதி வீடுகளின் கழிவு நீர் கலக்கின்றன. அதே நேரத்தில் சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு ரோசல்பட்டி ஆகிய ஊராட்சிகளின் கழிவு நீரும் அங்கு தான் கலக்கிறது. இதை எப்படி தடுக்க முடியும்?. அதேநேரத்தில் நகராட்சி பகுதியில் உள்ள வீடு களுக்கு விரைவாக இணைப்பு களை வழங்குங்கள் என சிபிஎம் உறுப்பினர் ஜெயக்குமார் தெரி வித்தார். தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் ஆறுமுகம், விருதுநகர் நகராட்சி வாசலில் நின்று கொண்டு  ஒரு தனி நபர் அவரே பணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதியின்றி வீடுகளுக்கு இணைப்புகளை கொடுத்து வருகிறார். அவர் மீது  என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர் கள்?என செய்தித் தாளை ஆதார மாக வைத்து கேள்வி எழுப்பினார். அவ்வாறு எதுவும் நடக்க வில்லையென தலைவர் பதில் கூறி னார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. பின்பு, அனுமதியின்றி மல்லப் பன் தெரு, ஏ4எஸ் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மரங்களை எப்படி தனி நபர் வெட்டுகிறார் என வும் திமுக உறுப்பினர் கேள்வி  எழுப்பினார். மேலும், கச்சேரி சாலையில் உள்ள சுகாதார பிரிவு  அலுவலகத்தின் பூட்டை பெண் ஒரு வர் எப்படி உடைத்து புதிய பூட்டு  போடலாம் எனவும், புகைப்பட ஆதாரங்களை மன்றத்தில் காண் பித்து பேசினார். 1 கோடிக்கும் மேல் தவறான கேட்புக்கான சொத்து வரிகளை ரத்து செய்யும் தீர்மானங்களை ஒத்தி வைக்க வேண்டுமெனவும், அதற்கு தனியாக குழுக்கள் அமைத்து ஆய்வு செய்த பின்பு, தீர்மானத்தை நிறைவேற்றலாம் என பெரும்பாலான உறுப்பினர்  கள் தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட் டன. மேலும், அவசரக் கூட்டத்தில்  ஏலம் குறித்த 2 தீர்மானங்களில் தகுதி இல்லாத ஒப்பந்தகாரர்கள் எப்படி ஏலத்தில் கலந்து கொண்ட னர். அதில் ஒருவருக்கு எப்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது. எனவே, இரு தீர்மானங்களையும் ரத்து செய்யுங்கள் என பல உறுப்பி னர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து இரு தீர்மானங்களும் ரத்து  செய்யப்பட்டன. மேலும், அனைத்துப் பகுதி களிலும் குப்பைகள் முறையாக வாங்கப்படவில்லையென்றும் கழிவு நீர் வாறுகால் சரியாக சுத்தம் செய்யப்படவில்லையெனவும் பெரும்பாலான உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

;