districts

img

இடிந்து விழும் நிலையில் கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையம்

திண்டுக்கல், ஏப்.7- இடிந்து விழும் நிலையில் உள்ள கோவிலூர் ஆரம்ப சுகா தார நிலையத்தை செப்பனிட வலி யுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதமடைந்து இடிந்து விழுந்து கொண்டிருக்கின்ற கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டடங்களை சீர மைத்திடவும், கூடுதல் கட்டடங் களை அமைத்திடவும், தரம்  உயர்த்திடவும் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புத னன்று கோவிலூரில் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு கே.பெரி யசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஹரி ஹரன், லோகேஷ்வரன், அருள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.