திண்டுக்கல், ஏப்.23- திண்டுக்கல்லில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் சார்பாக புத்தக திருவிழா ஆர்.எம். காலனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விசுவரூபன் தலைமை வகித்தார். கே. வீரய்யன் வரவேற்றார். மாமன்ற மேயர் இளமதி ஜோதிபிர காஷ் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி துவக்க உரையாற்றினார். மாமன்ற துணை மேயர் ராஜப்பா, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ச.கணே சன், திமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, சுபாஷ், ஆனந்த், துளிர் அமைப்பு யூசுப் அன்சாரி, பாரதி புத்தகாலய பொறுப்பாளர் என்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிவராஜ் நன்றி கூறினார்.