districts

img

தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு

தேனி, பிப்.2- பெரியகுளம் நகராட்சி 13-ஆவது வார்டில் திமுக தலை மையிலான கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மதன்குமாருக்கு நகராட்சி ஆணையாளர் புனிதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  பண்ணைப்புரம் பேரூராட்சி 15-ஆவது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.சுருளி வேலுக்கு பேரூராட்சி செயல் அலு வலர் குளோரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். காமயகவுண்டன்பட்டி பேரூ ராட்சி 12-ஆவது வார்டு உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்ட எஸ். பன்னீர் வேலுவுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆண்டிபட்டி பேரூராட்சி 17-ஆவது வார்டு உறுப்பினர்  வி. சின்னனுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டி யன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். க.புதுப்பட்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  எம். பிரதீபாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணி பதவி பிர மாணம் செய்து வைத்தார்.