சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலய அபிவிருத்தி, மயில்கள் பாதுகாப்பு அபிவிருத்திக்காக ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், ராமசாமி ராஜா நகர், விருதுநகர் சார்பில் ரூ.14 லட்சத்திற்கான வரைவோலையை கே.சரவணன், துணைப் பொது மேலாளர் எம்.கனகராஜ் ஆகியோர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் பாதுகாப்பக கண்காணிப்பாளரிடம் அளித்தனர். உடன் வனச்சரக அலுவலர் எம்.கார்த்திக், எம்.பார்த்திபன், உயிரியிலாளர் பி.சுரேஷ் குமார், வனத்துறை எம்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.