districts

img

யார் அயலி?

தமுஎகச மத்தியசென்னை ஒருங்கிணைத்த ‘அயலி யார்?’ என்கிற தலைப்பிலான நிகழ்ச்சி அரும்பு சிறார் நூலரங்கத்தில் அண்மையில் நடந்தது. ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘அயலி’ என்கிற இணையத் தொடர் குறித்த கலந்துரையாடலாக நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் முத்துகுமார், வசனகர்த்தா சச்சின் உள்ளிட்ட படக்குழுவினரும் அரசுப் பள்ளி ஆசிரியை உதயலட்சுமி, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி மற்றும் இணைய செயற்பாட்டாளர் மைனர் வீரமணி ஆகியோரும் கலந்து கொண்டு பல கருத்துக்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களில் சில தெறிப்புகள்:

“என்னுடைய மாணவி ஒருத்திக்கு பத்தாவது முடிச்சவுடனே திருமணம் பண்ணி வைக்க ரெடியா இருக்காங்க. அதுலருந்து தப்பிக்க அவ ஒரு ஆதிக்க சாதி பையன லவ் பண்ணா.. இப்போ அவனும் விலகிட்டான்.. டைரில அந்த 13 வயசுப் பொண்ணு ‘I hate me’ன்னு எழுதி வச்சிருக்கா...!”
- உதயலட்சுமி
•••••
“பத்தாவது முடிச்சா லைஸென்ஸ் எடுத்து டிரைவராக லாம்னு சொன்னாங்க.. அதனால நான் 10வது படிச்சேன். எங்க அக்கா பிபிஏ படிச்சாங்க. எங்கம்மா டெண்த்து. இதுக்கெல்லாம் தொடக்கம் எங்க இருக்குன்னு தேடிப் பார்த்தா, எங்க ஆச்சி ஒரு வீட்ல வேலை பார்த்துக்கிட்டு இருந் தாங்க. அது ஒரு பேங்க் ஆபிசர் வீடு. அவங்க அப்பா பத்தாங்கிளாஸ் வரைக் கும் இருக்கற ஒரு ஸ்கூலுல ஹெட் மாஸ்டர். சோ (So) அங்க ஒரு டார்க்கெட் பிக்ஸ் (target fix) ஆகுது. பத்தாங் கிளாஸ் எங்கம்மா பூர்த்தி பண்றாங்க.. அடுத்த தலைமுறைல வந்த நானும் 10-ங்கிளாஸ் முடிக்கிறேன். அப்புறம் பிஏ லாம் படிக்கிறேன். நான் திருநெல்வேலில இருந்து வர்றேன். நான் மட்டும்தான் தப்பி வந்திருக்கேன். இன்னும் என் அக்கா பையன் நாலாங்கிளாஸ் முடிச்சு ட்ரைவர் வேலதான் பார்க்கறான். இன்னுமே கல்வி புரித்த புரிதல்லாம் அங்க வந்துடல.. 90கள்ல போய் இதெல்லாம் நடந்திருக்கு மான்னு ஆச்சரியப்படறாங்க. 21ஆம் நூற்றாண்டுலயே இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு.”
-  கார்த்திக் புகழேந்தி
•••••
“எனக்கு தெரிஞ்சு 1952-க்கு அப்புறம் ‘அம்பாள் என்றைக் கடா பேசினாள்’ங்கற டயலாக் 2023லதான் வந்திருக்கு. இந்த மாதிரி கருத்துருவாக் கங்கள உருவாக்கற படங்கள் இப்போ தான் வர ஆரம்பிச்சிருக்கு. இதெல்லாம் நாம கொண்டாடிதான் ஆகணும். ஆனா லும் சிலர் இருக்காங்க.. இந்த படத்துல அவ்ளோ நல்லது இருக்கும். அதை பத்தி ரெண்டு நிமிஷம் பேசுவாங்க.. குறைய பத்தி இருபது நிமிஷம் பேசுவாங்க.. அவங்கள எல்லாம் தோழர் சொன்னா மாதிரி முற்போக்கு தர்குறி லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்.”
- மைனர் வீரமணி
•••••
“அவங்களோட சினிமாவெல்லாம் பாருங்க. டெக்னிக்கலி ரொம்ப ஸ்ட்ராங்.. கிராப்ட் (Craft)-ல ரொம்ப ஸ்ட்ராங்... அப்படின்னுல்லாம் சொல்லிக்கிட்டிருக்கற நேரத்துல முத்து குமாரோட வருகை ரொம்ப முக்கியமா இருக்கு.. அவங்கள அடிக்கணும்னாலும் நமக்கு வலிமை வேணும்.. மியாவ் மியாவ்னு பேசிக்கிட்டே இருந்தா அது பிரச்சினை. அப்போ அவங்கள அடிக்கிற அளவுக்கான வலிமை கொண்ட கிராப்ட் (craft) தெரிஞ்ச, ஒரு ஆள் நமக்கு வேணும்.. அதுக்கான முக்கியமான தொடக்கமா நான் முத்துகுமார் தோழர பார்க்கறேன்...
- சச்சின்
•••••
“இந்த மாதிரி ஒரு கிராமம் இருக்குதா.. அங்க லாஜிக் இடிக்குது... 90ல இருந்துருக்கலாம். இப்போலாம் அப்படி இல்ல’ அப்படின் னுல்லாம் சொல்றாங்க. இந்த கிராமம் ஒரு குறியீடுதான். இன்னைக்கும் நாம் சந்திக் கிற பல சிறுமிகள் ‘படிக்க வைப்பாங்களா அம்மா, அப்பா? இல்ல பாதியில நிறுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா?’ அப்படிங்கற தவிப்போடதான் போய்க் கிட்டு இருக்காங்க. இதை எல்லா இடத்துலயும் பார்க்கலாம்.”
- கீதா இளங்கோவன்
•••••
“இந்தத் தொடர் சமூகத்துல ஏதா வது தாக்கத்த ஏற்படுத்தி டும்னு நினைக்கறீங்களா... மாற்றத்த ஏற்படுத்திடும்னு நினைக்கறீங்களா’ ன்னுலாம் கேட்கறாங்க.. இங்க போட்டோல தொங்குறவங்க எல்லாம் என்ன கிறுக்கு பயலுகளா.. எல்லாரும் எவ்ளோ போராடியிருக்காங்க.. எனக்கு என்னன்னா, அந்த மாதிரி போராடிக்கிட்டு இருக்காங்க இல்லையா, அவங்களுக்கு நம்ம செலுத்துற ஒரு சிறு நன்றியாவும் கடமையாவும்தான் இந்தப் படைப்ப நான் பார்க்கறேன்...”
- இயக்குநர் முத்துகுமார்

இந்த நிகழ்ச்சியை தமுஎகச மத்திய சென்னை செயலாளர் ராஜசங்கீதன் ஒருங் கிணைத்தார். நிகழ்வில் கலந்து கொண்ட வர்களுக்கு தமுஎகச மத்தியசென்னை செயற்குழு உறுப்பினர்கள் டெல்பின் மற்றும் சூரியராஜ் ஆகியோர் புத்தகங் களை பரிசளித்து கெளரவித்தனர்.
- ராஜ் சங்கீதன்