districts

img

மதுரை சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை, செப்.25- மதுரை மாவட்ட மாற்றுத்திற னாளிகள்  நலத்துறை, மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் மற்றும் அலிகோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் செப்டம் பர் - 25 ஞாயிறன்று மதுரை  பெரி யார் பேருந்து நிலையம் அருகில்  உள்ள எம்.சி பள்ளியில் நடை பெற்றது. இந்த முகாமிற்கு நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழக நிதி -மனிதவள மேலாண்மைத் துறை  அமைச்சர்  பழனிவேல் தியாக ராஜன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான சிறப்பு அளவீட்டு முகாமை தொடங்கி வைத்து மாற்  றுத்திறன் கொண்ட பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.  இதில் மாவட்ட ஆட்சியர் மரு.  எஸ். அனீஷ் சேகர், மேயர் வ.  இந்திராணி, மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் தி. நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

முகாமில்  மாற்றுத்திறனாளி களுக்கான  மானியத்துடன் கூடிய  வங்கிக்கடன், இலவச பயிற்சிக்கு  நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திற னாளியை தேர்வு செய்தல் . வரு வாய்த்துறை மூலம் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவி தொகை வழங்குவதற்கான சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.    முகாமில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசு கையில், தமிழக முதல்வர் மாற்  றுத்திறனாளிகளுக்கான இந்த  துறையை தன்னுடைய துறையாக  நினைத்து செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் மாற்  றுத்திறனாளிகளுக்கான நிதி யினை அதிகரித்துள்ளார். அலிம்  கோவிற்கான நிதி  10 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நாம் முன்பு எடுத்த பெரும் முயற்சியால் இந்த முகாம் தற்போது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த  முகாம் வெற்றி பெறுவதற்கு அனை வருடைய ஒத்துழைப்பும் தேவை என்பதை இந்த நேரத்தில்  கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்த முகாமில் 725 பேர் பங்கேற்று பயன் பெற்றனர். இன்று (திங்களன்று)  மதுரை மாநகராட்சி  மண்டலம் - 5 க்கான  முகாம் டி. வி. எஸ். மெட்ரிக்குலே சன் பள்ளியில் நடைபெறுகிறது.

;