மதுரை, ஜன.5- மதுரை மாவட்டத்தில் இறுதி வாக் காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ், அனீஷ் சேகர் அங்கிகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை யில் புதனன்று வெளியிட்டார். மதுரை மாவட்டத்தில் பத்து சட்ட மன்றத் தொகுதிகளில் 13,31,825 ஆண் வாக்காளர்கள், 13,81,007 பெண் வாக் காளர்கள், 201 மூன்றாம் பாலினத்த வர்கள் உள்ளனர், மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 27,13,033 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள் ளனர், வரைவு வாக்காளர் பட்டிய லுக்கு பின் 10,768 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், 42,074 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர், மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதி களில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு உள்ளது, இங்கு 3,31,829 வாக்காளர்கள் உள்ள னர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழவந்தான் உள்ளது. இங்கு 2,19,194 வாக்கா ளர்கள் உள்ளனர். மாவட்ட முழுதும் 1163 வாக்கு சாவடி மையங்களில் 2718 வாக்கு மையங்கள் உள்ளன. என்றார் ஆட்சியர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 821387, பெண் வாக்கா ளர்கள்867952, இதரர்196 என மொத்தம் 1689535 வாக்காளர்கள் உள்ளனர். 2022 ஜன. 1-ஆம் தேதியை தகுதி நாளா கக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 2021 நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெற்றது. அதில் புதிதாக 23,130 வாக்காளர் கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரட்டை வாக்குப்பதிவுகள் 5,558 நீக்கம் செய்யப்பட்டன. கடந்த நவ.,1- இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 17,572 வாக்காளர்கள் இறுதி வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
தேனி
மாவட்டத்தில் உள்ள 4 சட்ட மன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் படி, 11,35,446 பேர் வாக்கா ளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், நான்கு சட்டமன்ற தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டி யலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை யில் புதனன்று மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட ஆட்சியருமான க.வீ. முரளீதரன் வெளியிட்டார். ஆண்டிபட்டி தொகுதியில் 1,37,351 ஆண் வாக்காளர்களும், 1,41,169 பெண் வாக்காளர்களும், 35 இதர வாக்கா ளர்களும் என மொத்தம் 2,78,555 வாக் காளர்களும், பெரியகுளம் தொகுதி யில் 1,40,897 ஆண் வாக்காளர்களும், 1,46,797 பெண் வாக்காளர்களும், 113 இதர வாக்காளர்களும் என மொத் தம் 2,87,807 வாக்காளர்களும், போடி நாயக்கனூர் தொகுதியில் 1,36,542 ஆண் வாக்காளர்களும், 1,43,314 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக் காளர்களும் என மொத்தம் 2,79,878 வாக்காளர்களும் உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,41,155 ஆண் வாக்காளர்களும், 1,48,013 பெண் வாக்காளர்களும், 38 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,89,206 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 5,55,945 ஆண் வாக்காளர்களும், 5,79,293 பெண் வாக் காளர்களும், 208 இதர வாக்கா ளர்களும் என மொத்தம் 11,35,446 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணி யன், பெரியகுளம் சார் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், உத்தமபாளைம் வரு வாய் கோட்டாட்சியர் செல்வி கௌசல்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்ப ழகன், தேர்தல் வட்டாட்சியர் ஜே.பால சண்முகம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.