மதுரை, அக்.15- மதுரையில் தனியார் உணவு விடுதியில் இதய அறுவை சிகிச்சை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வேலம் மாள் மருத்துவமனை சார் பில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள இதய சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளில் சிறப்பு பெற்ற மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சையில் சிறப்பாக விளங்கும் மருத்து வர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து வேலம்மாள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், இதய அறுவை சிகிச்சை மருத்து வர் ராம் பிரசாத் செய்தியா ளர்களிடம் பேசுகையில், ‘‘இதய சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் அதிக மாக நடைபெற்று வருகிறது. இதற்கு மக்களின் துரித உணவு முறையே காரணம். அறுவை சிகிச்சையை ரோபோக்கள் மூலம் தற் போது நடைபெற்று வரு கிறது. இது மிகவும் ஒரு ஆபத் தான முறையாகவே கருதப் படுகிறது. மருத்துவர்கள் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையே மிக சிறந்த முறையாக இருக்கும். மேலும் தற்போது இளைய வயதில் இதய அறுவை சிகிச்சை அதிகமான அள வில் எண்ணிக்கையில் நடை பெற்று வருகிறது. எனவே மக்கள் தங்களது உணவு முறையை மாற்றிக் கொண்டு துரித உணவை அறவே நீக்கிவிட்டு, தேவையான அளவு மட்டுமே உணவை உட்கொண்டு நோயற்ற வாழ்வில் வாழ வேண்டும். மனிதனுக்கு உறக்கம் இன்றியமையாதது. அப் போது தான் இதய அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை குறையும் நிலை உருவா கும். இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை மருத்து வர்கள் மிக அதிகமாக உள்ளனர். மேலும் மருத்து வத்தை பொறுத்தவரை இந்தியாவில் தான் சிறப் பான மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அனைவரும் சிகிச் சையின் போது சிறப்பாக செயல்பட வேண்டும் மருத்துவர்கள் மட்டுமே நம்பி செயல்பட வேண் டும்’’ என்றார்.