திருநெல்வேலி, ஜூன் 26- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஏ.டி.எம்.எஸ்.மஹாலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 4வது மாவட்ட மாநாடு நடைபெற்றது மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் ஆர்.மதுபால் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழுத் தலைவர் செ.முத்துக்குமாரசாமி வர வேற்று பேசினார். கந்தசாமி அஞ் சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசி னார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலை வரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.கிருஷ்ணன், திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவ மனை முன்னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலா ளர் கலையரசன், மாநில குழு உறுப் பினர் பூ.கோபாலன் ஆகியோர் பேசி னர். திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழர் உரிமை மீட்பு களம் அமைப்பாளர் லெனின் கென்னடி, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மனித உரிமை களம் பரதன், மத்திய மாநில அரசு ஊழியர் நல சங்க அரிராம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் ஆணவப்படு கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும், மத்திய - மாநில அரசுகளில் உள்ள காலிப் பின்னடைவு பணி யிடங்களை உடனே நிரப்ப வேண் டும், எஸ்சி/ எஸ்டி யினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ஐ முறையாக அமலாக்க வேண்டும்,நெல்லை மாவட்டத்தில் தாட்கோ மூலம் பட்டியலின மக்க ளுக்கு வழங்கப்படும் கடன் தொகை யை அதிகரித்திடவும், கடன் வழங்கப்படும் எண்ணி க்கையை அதிகரித்திட வேண்டும்,தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாவட்டத் தலைவராக ஆர்.மதுபால், மாவட்டச் செயலாளராக எம்.சுடலைராஜ், மாவட்டப் பொரு ளாளராக கு.பழனி மற்றும் 11 துணை தலைவர்கள், துணை செயலா ளர்கள் உட்பட 37 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட் டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் நிறைவுரை ஆற்றினார் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.