districts

மதுரை முக்கிய செய்திகள்

நகை வியாபாரிகளிடம் ரூ.3 கோடி மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது

தேனி, ஆக.9- ஆண்டிபட்டியில் நகைகள் வாங்கி விற்பனை செய்வ தாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் நகைக்கடை உரிமையாளர் மனைவி உட்பட 2 பேரை  குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது கைது செய்த னர். நகை மொத்த வியாபாரி மதுரை தெற்கு ஆவணி மூலவீதியைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பவர் சக நகை  வியாபாரிகள், அய்யப்பன், அசோக்குமார், சுரேஷ்குமார்,  கார்த்திக், கனகராஜ் ஆகியோரிடம், சுமார் ரூ.3 கோடி மதிப்பில் நகைகளை வாங்கி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)  அரங்கநாயகி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி  னர். இதில் முருகபாண்டி மீது வழக்குப்பதிவு கைது செய்தனர். இந்நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய முருகபாண்டியின் மனைவி சாந்தி, வீரவிக்னேஷ்  ஆகிய இருவரையும் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆக 15 இல் கிராம சபைக் கூட்டம் தேனி ஆட்சியர் அறிவிப்பு

தேனி, ஆக.9-  தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி 130 கிராம ஊராட்சிகளிலும் முற்பகல்  11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும்  கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த  உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவா திக்கப்பட உள்ளது.

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

விருதுநகர், ஆக.9- விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் அரை கிலோ  கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி அரசு  நடுநிலைப் பள்ளி அருகே போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர  வாகனத்தில் வந்த இருவர் போலீசாரைக் கண்டதும் தப்பி யோட முயன்றனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப்  பிடித்த போலீசார், வாகனத்தை சோதனை செய்தனர். அதில், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 500 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. எனவே, இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீசார் அதே பகுதி யைச் சேர்ந்த பாலமுருகன் (24), ஆனந்த் (25) ஆகியோ ரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மின்கம்பத்தைத் தொட்ட  பெண் மின்சாரம் தாக்கி பலி

மதுரை, ஆக. 9- மதுரை வண்டியூர் காந்தி நகர் அழகர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சந்திரா(64). இவர்  சௌராஷ்டிரபுரம் கவிபாரதியார் தெருவில் உள்ள மருத்து வமனைக்கு செவ்வாயன்று  இரவு சென்றார். அப்போது அப்பகுதியில் பெய்த கனமழையால் மின்வயர் துண்டிக்  கப்பட்டு மின்கம்பம் மீது தொங்கியுள்ளது. இதையறி யாத சந்திரா மின்கம்பத்தை தொட்டுள்ளார். அப்போது  அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கிவீசப்பட்டு பலத்தக் காயமடைந்தார்.  அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப்பல னின்றி சந்திரா புதனன்று  உயிரிந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் ராஜா அளித்தப் புகா ரின்பேரில் அண்ணாநகர் காவல்துறை  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒருவர் வெட்டிக்கொலை

மதுரை, ஆக.9- மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). இவர், அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி  வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில், செவ்வாயன்று வழக்கம் போல் கம்பெனியை அடைத்து விட்டு தனது  இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது  வீட்டிற்கு அருகில் சென்ற போது அங்கு மறைந்திருந்த ஒருவர், பாலனை  வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக, அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த காவல்துறையினர் பாலனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

மதுரை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

மதுரை, ஆக.9-  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்பாடும் பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராமு மகன் அபிஷேக்(19). இவர் மதுரை மாவட்டம் பாசிங்கா புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக மதுரை அருகே உள்ள சிக்கந்தர்சாவடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.  இந்நிலையில் கல்லூரித் தேர்வில் அபிஷேக் குறைவான மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறப்படு கிறது. இதனால் பெற்றோர் அபிஷேக்கை படிப்பில்  கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளனர். இதனால்  மனமுடைந்த அபிஷேக் சிக்கந்தர் சாவடியில் உள்ளஅறையில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத்  தற்கொலை செய்துகொண்டார். நள்ளிரவில் அவரது சக நண்பர்கள் பார்த்தபோது அபிஷேக் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அலங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். 

நியோ மேக்ஸ் நிறுவன நிதி மோசடி தலைமறைவாக இருந்த அதிகாரி கைது

மதுரை, ஆக. 9- மதுரை நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநரை  பொருளாதார குற்றப்  பிரிவு காவல்துறை கைது செய்தது. மதுரையை தலைமையிடமா கக்கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்ப ரத்தை நம்பி  ஏராளமானோர் கோடிக்க ணக்கான ரூபாய்களை முதலீடு செய்த னர்.  ஆனால், நிறுவனம் முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி யில் ஈடுபட்டதால்,  முதலீடு செய்தவர்கள்  மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார்  அளித்தனர். இதில் நிறுவன கிளைகளின்  இயக்குநர்கள் பத்மநாபன், சைமன் ராஜா , கபில் , இசக்கிமுத்து மற்றும் சகாய  ராஜா ஆகியோரை  பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படையினர்  கைது செய்தனர்.  இந்நிலையில் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான விருதுநகர்  மாவட்டம் மருளுத்து மீனாட்சிபுரம்  பகுதி யைச் சேர்ந்த மாரிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தலைமறைவாக இருந்தார். இவரை புதனன்று  கைது செய்தனர்.  

மதுரையில் மாதிரி வாக்குப்பதிவு

மதுரை, ஆக.9- மதுரை மாவட்டத்தில், வருகின்ற நாடா ளுமன்ற தேர்தல் 2024-ல் பயன்படுத்த உள்ள  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் பணி 04.07.2023- அன்று மதுரையில் உள்ள டாக்டர் தங்க ராஜ் சாலையில் அமைந்துள்ள மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்  படும் கிடங்கில் துவங்கியது. அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், பெங்க ளூரு பெல் நிறுவன பொறியாளர்கள் ஆகி யோர்களால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 7,182 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், 3,893 கட்டுப்பாட்டு கருவிகள், 4,184 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்தி ரங்கள் சரிபார்க்கப்பட்டு 08.08.2023 அன்று மேற்படி பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து ஆகஸ்ட் 9 அன்று தேர்தல் ஆணை யத்தின் அறிவுரையின்படி மாதிரி வாக்குப்  பதிவு நிகழ்வை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா தலைமையில், அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை யில் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணி கள் 10.08.2023-அன்று நிறைவு பெற வுள்ளன. மாதிரி வாக்குப்பதிவு முடிந்த வுடன் பயன்படுத்த இயலாத வாக்குப்பதிவு  இயந்திரங்கள் பெங்களுரு பெல் நிறு வனத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப் படும்.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் மற்றும் அரசி யல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

அரசு நில மோசடியில் மேலும் ஒருவர் கைது

தேனி, ஆக.9- பெரியகுளம் வட்டத்தில் அரசு நிலத்தை  மோசடியாக பட்டா வழங்கிய வழக்கில்  மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல்துறை யினர் கைது செய்தனர். பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. வடவீர நாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக் குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13  ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் நிலம் அரசு  அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப் பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா  வழங்கப்பட்டது தொடர்பாக தேனி சி.பி. சி.ஐ.டி. போலீசார்கடந்த ஆண்டு வழக்குப்  பதிவு செய்தனர். இதுதொடர்பாக, பெரி யகுளம் சப்-கலெக்டராக இருந்த ரிஷப்  கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப் பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தின மாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி,  நில அளவையர்கள் பிச்சைமணி, சக்தி வேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக  அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவி யாளர் அழகர், மண்டல துணை தாசில்தா ரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்ததாக பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்  அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். பின்னர் மேலும் பலரின் பெயர்கள் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் தாசில்தார் கிருஷ்ணகுமார், அன்னபிரகாஷ் உள்பட 16 பேர் ஏற்க னவே கைது செய்யப்பட்டனர். இந்நிலை யில், இந்த வழக்கில் திண்டுக்கல் பால கிருஷ்ணாபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது 73) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதனன்று கைது செய்தனர். கெங்குவார்பட்டி பகுதியில் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் அவ ருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரும் அரசு நிலத்துக்கு மோசடியாக பட்டா பெற்றதாகவும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக.12 முதல் 17 வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி

மதுரை, ஆக.9- மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் சாப்டூர் கிராமம் சதுரகிரிமலை சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 16 அன்று நடைபெறவுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை  தவிர்க்கும் பொருட்டு ஆகஸ்ட் 12 முதல் 17 ஆம் தேதி  வரை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மேற்கண்ட தினங்களில் அதிகாலை 5.30 மணி  முதல் நண்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனு மதிக்கப்படுவார்கள்.  எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள்  ஆகஸ்ட் 12 முதல் 17 ஆம் தேதி வரை பரவலாக வருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் மலைமீது தங்கு வதற்கு அனுமதியில்லை. பக்தர்களின் நலனுக்காக போக்குவரத்துத் துறையின ரால், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, டி. கல்லுப்பட்டி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வனப்பகுதிக்குள் விட்டுச்  செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வயதான  மற்றும் கடுமையான நோய் உள்ளவர்கள் மலை மீது ஏறு வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா கேட்டுக் கொண்டுள்ளார்.

கிராம இண்டர்நெட் உபகரணங்களை திருடினால் நடவடிக்கை  விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர், ஆக.9- கிராம ஊராட்சி சேவை மையங்களில் இணைய வச திக்காக உள்ள உபகரணங்களை சேதப்படுத்தும் மற்றும்  திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளி லும், பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி  இழைவலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இப்பணியானது வரும் செப்டம்பர் முதல் துவங்கப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம்  அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டு வரு கிறது. இந்த உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.