மதுரை, மே. 13- மதுரையில் வெள்ளி யன்று அதிகாலை பால ரெங்காபுரத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கரூரை நோக்கி சரக்கு லாரி ஒன்று புறப் பட்டு சென்றது. அரசரடி பகு திக்கு வரும் போது சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவ ரில் மோதி லாரி விபத்துக் குள்ளானது. லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்த தால் விபத்து நடந்ததாக திடீர் நகர் போக்குவரத்து காவல் துறையின் முதல்கட்ட விசார ணையில் தெரிய வந்தது. விபத்துக்குள்ளான லாரி யில் இருந்த உர மூட்டைகள் மாற்று வாகனத்திற்கு மாற்றப்பட்டு லாரி அப்புறப் படுத்தப்பட்டது. அப்பகுதி யில் உள்ள ரயில்வே மைதா னத்திற்கு நடை பயிற்சிக்கு வரும் சிலர் கூறுகையில், அரசரடி பகுதியில் இந்த இடத்தில் மட்டும் தான் சாலை குறுகலாக உள்ளது இந்த இடத்திலிருந்து 20 மீட்டரை கடந்தால் சாலை அகலமாக இருக்கும். இவ் விடத்தில் உள்ள உணவகம் மற்றும் கடைகள் தங்களு டைய கடைக்கு வருபவர்க ளின் வாகனங்களை நிறுத்து வதற்காக சாலையை ஆக்கி ரமித்துள்ளனர். இதனால் சாலை இந்த இடத்தில் குறு கலாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் வரும் போது மிகவும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படும். காலை முதல் இரவு வரை இவ்விடத்தில் அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது, சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ் சாலை துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இவ் விடத்தில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.