திண்டுக்கல், மே 9- ஆடை வடிவமைப்பின் ஒரு சிறப்பு யுக்தியாக கிராபிக் பில்டர்களை பயன்படுத்தி புதிய வடிவங்களை அமைப்பதற்கான காப்புரிமையை காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழக மனையியல் அறிவியல் பேராசிரியர் ஆர்.ஐ.சத்யா மற் றும் ஆராய்ச்சி மாணவர் ஆர். அணில்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்துப் பேசிய அறி வியல் பேராசிரியர் ஆர்.ஐ.சத்யா, இந்த புதிய யுக்தி ஆடைகளின் சரியான பொருத்தத்தை உறுதி செய்யவும், தயாரிக்க உதவும் பொருட்கள் வீணாவதையும் தடுக்கப் பெரிதும் பயன்படும். இந்த கண்டுபிடிப்பின் காப்புரி மையை காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெற்றிருப்பது, இந்தத் துறை யில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் களுக்கும், மாணவர்களுக்கும், ஆடை தயாரிக்கும் தொழிற் சாலைகளுக்கும் பெரிதும் பயன்படும் என்றார். காப்புரிமை பெற்றதற்காக பேராசிரியர் ஆர்.ஐ.சத்யா மற் றும் ஆராய்ச்சி மாணவர் ஆர். அணில்குமாரை காந்திகிராம பல்கலைக்கழகத் துணைவேந் தர் (பொறுப்பு) முனைவர் டி.டி.ரங்கநாதன் மற்றும் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் எம்.ஜி. சேதுராமன் ஆகியோர் பாராட்டி னர்.