districts

img

திருவில்லிபுத்தூர் இலவச மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 16- திருவில்லிபுத்தூரில் குருவம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் இலவச மருத்துவ மனை, நண்பர்கள் ரோட்டரி சங்கம், மன்னர் திருமலை நாயக்கர் டிரஸ்ட் மற்றும் சிவகாசி  அனில் குமார் கண் மருத்துவமனை ஆகி யவை இணைந்து இலவச பொது மற்றும்  கண் மருத்துவ முகாமை நடத்தின. திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் மருத்துவ முகாமை  துவக்கி வைத்தார்.நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் தலைவர்ஜி.முருகதாசன் மற்றும் மேலாளர் குருவம்மாள், என்.எஸ். வேலாயுதம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். கந்தசாமி ஒருங்கி ணைத்தார்.