districts

மதுரை முக்கிய செய்திகள்

அணைகளில் நீர்மட்டம்

முல்லைப்பெரியாறு- நீர்மட்டம்-119.40 அடி. வரத்து- 520 கன அடி. திறப்பு-511 கன அடி. வைகை அணை-நீர்மட்டம் 47.11 அடி. வரத்து-100 கன அடி. திறப்பு-69 கன  அடி. மஞ்சளாறு அணை-நீர்மட்டம் 50.11அடி. வரத்து-திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை-நீர்மட்டம் 78.78  அடி. வரத்து இல்லை. திறப்பு- 3 கன அடி. மழையளவு: பெரியாறு-7, தேக்கடி-3.2, கூடலூர்-1, சோத்துப்பாறை-1.2, உத்தமபாளையம்-1.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இறந்த நிலையில்  காருக்குள் கிடந்த பேராசிரியர் 

விருதுநகர், செப்.12- விருதுநகரில் ஏ.சி காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பேராசிரியர் உடல் மீட்கப்பட்டது. விருதுநகர் எல்.பி.ஸ்.நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (44). இவர் ஆலங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  பேராசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி சசி கலாவும் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி யாற்றி வருகிறார். திங்களன்று கண்ணன் பணிக்கு செல்லவில்லையாம். அவரது மனைவி பணி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டிலிருந்த காரில் கண்ணன் மூச்சுப் பேச்சின்றிக் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சசி கலா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

நாய் மீது இரு சக்கர வாகனம்  மோதியதில் ஒருவர் பலி

காரியாபட்டி, செப்.12- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கழு வனச்சேரியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36). இவர்  தனது மனைவி, குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில்  மதுரை-தூத்துக்குடி சாலையில் சென்று கொண்டிருந்துள்  ளார். தோணுகால் அருகே வந்த போது, சாலையின்  குறுக்கே திடீரென வந்த நாய் வாகனத்தில் மோதி யுள்ளது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர். இவர்  களில் ராமகிருஷ்ணனுக்கு காரியாபட்டி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்பு,  மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

அடையாளம் தெரியாத  முதியவர் மரணம்

தேனி, செப்.12- போடி பேருந்து நிலைய நிழற்குடையில் வசித்து வந்தவர் 70 வயது முதியவர். இப்பகுதியில் சமூக ஆர்வ லர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு இங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் செப். 8-ஆம் தேதி  உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை அப்பகுதியினர் போடி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். போடி காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

தொழிலதிபரான நிலஅளவையர்  வீட்டில் சோதனை

திண்டுக்கல், செப்.12- திண்டுக்கல்லில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட ரத்தினம் திண்டுக்கல்லில் அரசு நில அளவைத் துறையில் அளவை யராகப் பணியாற்றி வந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு ரியல்  எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்கள் மூலம் தொழிலதிபர் ஆனார். அவரது மகன் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினராக உள்ளார்.  இந்த நிலையில் ஜி.டி.என்.சாலையில் உள்ள அவரது  இல்லத்தில் காலை ஒன்பது மணி முதல் வருமான வரித்துறை சோதனையில் நடைபெற்றது. திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி அருகேயுள்ள அனிபா நகரில் உள்ள அவரது மைத்துனர் கே.ஆர்.கோவிந்தனின் வீட்டிலும் ரெய்டு சோதனை நடைபெற்றது.

திட்டப்பணிகள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆய்வு

சின்னாளபட்டி, செப்.12- வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் மல்ல ணம்பட்டிஊராட்சி அழகா புரியில் ரூ.18 லட்சம் மதிப் பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்க ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடை பெற்றுவருகிறது. பூசாரிபட்டி காளியம்மன் கோவில் பகுதியில் பேவர் பிளாக் சாலை ரூ. 8 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. தவிர ரூ.9 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை வத்தலக் குண்டு ஊராட்சி ஒன்றியக்  குழுத் தலைவர் பரமேஸ் வரி, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி, மல்லணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்முருகன் மற்றும் வார்டு உறுப்பினர் கள் பார்வையிட்டனர்.

ரூ.46.68 லட்சம் மதிப்பிலான வாகனத்தை வழங்கிய ஐசிஐசிஐ வங்கி

இராமநாதபுரம், செப்.12- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இன்று (12.09.2023) ஐசிஐசிஐ வங்கி அறக்கட்டளை சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரனிடம் ஐசிஐசிஐ வங்கி அறக்  கட்டளை சார்பில் அதன் நிர்வாக மேலாளர்,  மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ.46,68,399 மதிப்பில் இரத்த வங்கி வாகனம், வனத்துறை  மூலம் கடலோரப் பகுதியில் உயிரினங்களை பாதுகாப்பதற்கு மருத்துவ வசதியுடன் கூடிய ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனத் தையும் வழங்கினார். மாவட்ட வன உயிரினக் காப்பாளர் பகான்  ஜெகதீஸ் சுதாகர், மாவட்ட வருவாய் அலு வலர் இரா.கோவிந்தராஜலு, இணை இயக்கு நர் சகாய ஸ்டீபன் ராஜ், ஐசிஐசிஐ வங்கி அறக்  கட்டளை நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

குடும்பத் தகராறில் ஒருவர் கொலை

விருதுநகர், செப்.12- விருதுநகர் அருகே இனாம் ரெட்டியா பெட்டியில் குடும்பத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் அருகே உள்ளது இனாம்  ரெட்டியபட்டி. இப்பகுதியைச் சேர்ந்த வர் மகேந்திரன் (40). இரு சக்கர வாக னம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது சித்தப்பா மகன் மாரியப்பன் (34). மகேந்திரன் தனது சகோதரி மகளை  கடந்த 2016-ஆம் ஆண்டு மாரியப்பனுக்கு  திருமணம் செய்து வைத்துள்ளார்.  இந்த நிலையில் மாரியப்பனின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். மனை வியை சேர்த்து வைக்கக் கோரி மகேந்தி ரனிடம் பலமுறை முறையிட்டுள்ளார் மாரி யப்பன். ஆனால் அவர் சேர்த்து வைக்க வில்லையாம். இதனால் கோபத்திலி ருந்த மாரியப்பன் செவ்வாயன்று மகேந்  திரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு சூலக்கரை காவல்நிலையத்தில் சரண டைந்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டம்  ரூ.750, ரூ.600 என கட்டணம் நிர்ணயம்

இராமநாதபுரம், செப்.12- இந்திய முன்னாள் குடியரசுத் தலை வர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை யொட்டி அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் மாபெரும் மாரத்தான்  போட்டி நடத்துவது குறித்த ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன்,  மாரத்தான் போட்டிக்குரிய ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உருவம் பொறித்த லட்சினையை செவ்வாயன்று வெளியிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாரத்தான் போட்டி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து துவங்கி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழி யாக பாம்பன் மேம்பாலம் வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் ஒரு போட்டியும், நினைவிடம் முதல் தங்கச்சிமடம் வரையி லான சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு  மற்றொரு போட்டியும் நடைபெறுகிறது. 21 கிலோமீட்டர் போட்டியில் பங்கேற்க உள்ள வர்கள் ரூ.750 செலுத்தி முன்பதிவு செய்ய  வேண்டும். ஐந்து கிலோ மீட்டர் செல்வோ ருக்கான போட்டியில் பங்கேற்க ரூ.500  செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் 500 நபர்களுக்கு மட்டுமே அனு மதி. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள வர்கள் உடனடியாக https://www.town script.com/e/kalam-half-marathan-324420marathan-324420 என்ற இணைய தளத்திலும், தொலைபேசி எண்: 80980 30808 என்ற எண்ணில் காலை 10.00 முதல்  மாலை 04.00 மணி வரை தொடர்பு கொண்டு  பயன்பெறலாம். போட்டியில் பங்கேற்க உள்ளவர் களுக்கு டி-சர்ட், கேப் மற்றும் புரத உணவுப் பொருட்கள் ஆகியவை வழங்கப்படும். முதலிடம் பெறுபவர்களுக்கு பதக்கம்,  பாராட்டுச்சான்று மற்றும் காசோலைலை யும் வழங்கப்படும். இப்போட்டியின் நோக்  கம் ‘ உங்கள் கனவுகளுக்காக ஒடுங்கள்” என்பதாகும் என்றார்.

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கான ஊதியத்தை  உடனடியாக வழங்க சிஐடியு கோரிக்கை

சின்னாளபட்டி, செப்.12- உள்ளாட்சி பணியாளர்களின் ஊதி யத்தை உடனடியாக வழங்க சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித் தார். மாநிலப் பொதுச் செயலாளர் கேஆர். கணேசன், நிலக்கோட்டை ஒன்றிய கன்வீ னர் சாதிக்அலி, ஒன்றியச் செயலாளர் பரம சிவம், மாவட்டத் தலைவர் ராமசாமி ஆகி யோர் கலந்துகொண்டனர். பச்சைமலை யன் கோட்டை,விளாம்பட்டி, எத்திலோடு கிராம ஊரட்சிகளைச் சேர்ந்த பணியா ளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், “தூய்மைப் பணியா ளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி  பராமரிப்பாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்க வேண்டிய ஊதி யத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இயற்கை எய்திய தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல் ரயில்  போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, செப்.12- திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடை களில் உள்ள ரயில் பாதைகளில் சரளைக் கற்கள் நிரப்பும் பணிகள் நடைபெற உள் ளது. இதன் காரணமாக திண்டுக்கல்-திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம் பர் 16-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம்  தேதி வரை திண்டுக்கல்- திருச்சிராப்பள்ளி பயணிகள் சிறப்பு ரயில்  தாமரைப்பாடி-திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

“செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிதி மீண்டும் வந்து விடும்”

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி சிவகங்கை, செப்.12- சிவகங்கையில் இயங்கி வரும் ஆதி  திராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியை  ஆய்வு செய்த அத்துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாட்கோவில் வழங்கப்படும் வங்கி கடன் மக்களுக்கு எளி மையாகக் கிடைக்க வேண்டும் என்றும், அலைக்கழிப்புக் கூடாது என்று அவர் அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ரூ.100 கோடி ரூபாய்  செலவில் நான்கு மாவட்டங்களில் ஆதி திராவிடர் மாணவர் தங்குவதற்கான கல்லூரி விடுதிகள் கட்டுவதற்குத் திட்டமி டப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணிகள்  தொடங்கும் என்றார். ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப் படும் நிதி செலவு செய்யப்படாமால் திருப்பி அனுப்புவதாக கூறப்படுவது தொடர்  பாக எழுப்பப்பட்ட கேளிக்கு பதிலளித்த  அமைச்சர் “நிதி திரும்பி அனுப்பபட்டாலும் மீண்டும் வந்து விடும்”  என்றார். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை யில்  நடைபெற்றது. கூட்டுறவுத் அமைச்சர்  பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற  உறுப்பினர் தமிழரசி, மாவட்ட வருவாய்  அலுவலர் மோகனச்சந்திரன், காஞ்சிரங்  கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணி முத்து, திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத்  தலைவர் துரைஆனந்த்,   மாவட்ட அள விலான வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் சிபிஐ மறியல்

திண்டுக்கல், செப்.12 நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை யின் படி ஏழரை லட்சம் கோடி ஊழலில்  ஈடுபட்ட மோடி அரசு வெளியேற வேண்டு மென வலியுறுத்தி திண்டுக்கல் தலைமை  தபால் நிலையம் முன்பு சிபிஐ மறியல் நடத்தியது. வேடசந்தூரிலும் மறியல் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் ஏ.பி.மணிகண்டன். மாநகர் செயலாளர் கே.ராஜாங்கம் உள்ளிட்ட 150 பேரை காவல்துறை கைது செய்தது.

ஒன்றியக் கவுன்சில் கூட்டம்: திமுக வெளிநடப்பு

சின்னாளபட்டி, செப்.12- பாரபட்சமாக நிதி ஒதுக்கும் அதிமுக  தலைவரைக் கண்டித்து திமுக உறுப்பி னரகள் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்  கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்  றது. ஒன்றியத் தலைவர் ரெஜினாநாய கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் பஞ்சவர்ணம், விஜய சந்தி ரிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  துணைத் தலைவர் யாகப்பன் வரவேற்றார். கூட்டத்தில் பேசிய சுயேட்சை உறுப்பினர் கணேசன், “மீனாட்சிபுரம் முதல் நூத்தலாபுரம் வரை உள்ள சாலை யை செப்பனிட்டு மின்விளக்கு அமைக்க  வேண்டும்” என்றார்.  மற்றொரு உறுப்பினரான ராஜதுரை பேசுகையில், “ஒன்றியக் கவுன்சிலர் நிதி யைத் தவிர மற்ற நிதிகளின் மூலம் நடை பெறும் பணிகளை ஒப்பந்ததாரர்கள்  கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துவ தில்லை. இதனால் வேலையின் தரம்-மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்தந்தப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்” என்றார். உறுப்பினர்கள ரூபிசகிலா, சித்தர் கள் நத்தம் அறிவு(எ)சின்னமாயன், இராமராஜபுரம் செல்வி ஆகியோர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினாநாயகம் (அதிமுக) திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பகுதிக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கி பார பட்சத்துடன் நடந்து கொள்கிறார். தங்க ளைப் புறக்கணிக்கிறார் எனக்கூறி வெளி நடப்பு செய்தனர்.

நெகிழிப் பைகள் பறிமுதல்

தேனி, செப்.12-  போடி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்  பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்  கும் வகையில் சோதனை செய்யப்பட் டது. போடி நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி தலைமையில் சுகாதார அலு வலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்  கள் கணேசன், அஹமது கபீர், சுரேஷ் குமார் ஆகியோர் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். காமராஜர் சாலை, பேருந்து நிலை யம், தேவாரம் சாலை ஆகிய பகுதிகளில்  நடைபெற்ற சோதனையில் சில கடை களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள்,  பைகள் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்  டது. இந்தக் கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

கஞ்சா விற்றவர் கைது

தேனி, செப்.12- தேனி ரயில்வே சாலையில் கஞ்சா விற்பனை செய்த தேனி பாண்டியன் நக ரைச் சேர்ந்த கோவிந்த பெருமாள் மகன்  பாலாஜி என்பவரிடமிருந்து 1.100 கிலோ  கஞ்சா, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை தேனி சார்பு ஆய்வாளர் ஜீவா னந்தம் தலைமையிலான காவலர்கள் பறிமுதல் செய்தனர்.