districts

img

பூக்களின் விலை கடும் உயர்வு

சின்னாளப்பட்டி அக்.22- தீபாவளியையொட்டி நிலக்கோட்டை பூமார்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பூமார்க் கெட்களில் ஒன்றான நிலக்கோட்டை மலர் சந்தையில் தீபா வளி பண்டிகையால் பூக்கள் வாங்க வெளியூர் வியா பாரிகள் குவிந்தனர்.  மேலும் நிலக்கோட்டை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மூன்றாயிரம் ஏக்கர் பரப்பள வில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்.ஓ தரச்சான்று கொண்ட மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைந்த அளவே வந்தது. இதனால்  மல்லிகை ரூ.1500 முதல் 2000 வரை  மற்றும் முல்லை 1200-1500 வரை எனவும் ரோஸ்-300,சென்டுமல்லி-250, ஜாதிப்பூ 450,செவ்வந்திப்பூ - 600 என இருமடங்கு உச்சகட்ட விலை உயர்வுக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கனகாம்பரம் ஒரு கிலோ ரூபாய் 1200க்கும், பிச்சிப்பூ என்ற ஜாதி பூ ரூபாய் 450 முதல் ரூபாய் 500க்கும் விற்பனையானது நிலக்கோட்டை மலர்  சந்தையில் முக்கியமான பூக்கள் அனைத்தும் இருமடங்கு  உயர்ந்து நல்ல  விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.