districts

மதுரை முக்கிய செய்திகள்

பாலியல் வல்லுறவு: ஒருவர் கைது

சிவகாசி, அக்.6- சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி புதுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன்  மகன் மாரீஸ்வரன் (20). இவர் அதே  பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணை திருமணம்  செய்வதாக ஆசை வார்த்தைன் கூறி பாலியல் வல்லுறவு  செய்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கர்ப்பம டைந்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், மாரீஸ்வரன் குடும்பத்தாரிடம் அவரை திருமணம் செய்து  கொள்ள கோரியுள்ளனர். ஆனால்,  மாரீஸ்வரன் மறுத்த தோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சிவகாசி அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.

தேனியில் ஊராட்சித் தலைவர் கழுத்தறுப்பு 

தேனி, அக்.6-  தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்றத்  தலைவராக இருப்பவர் பிச்சை (52).  இவர் புதனன்று இரவு  அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் தாக்கி யதில் கீழே விழுந்தார். பின்னர் எழுந்து வீட்டிற்கு சென்று  பார்க்கையில் உடல் முழுவதும் ரத்தக்காயம் இருந்துள் ளது. அவரை உறவினர்கள் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக பழனி  செட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பிற மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு  தமிழக முதல்வர் கடிதம் அனுப்ப வேண்டும்

மாணிக்கம் தாகூர் எம்.பி வேண்டுகோள்

விருதுநகர், அக்.6- தீபாவளி பட்டாசு விற்பனைக்கு மற்ற மாநிலங்கள் தடைபோடுவதை தவிர்க்க பிற மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்  வர்  கடிதம் எழுத வேண்டும் என்று விருது நகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்  பில் கூறியதாவது:    தீபாவளி பண்டிகை நெருங்கி வரு கிறது. இச்சூழ்நிலையில் தில்லி மாநிலத்  தில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதிப்பதற்கு முன்பாக, அத் தொழிலை  பாதுகாக்கும் நோக்கத்தோடு, தமிழக  முதல்வர் அனைத்து மாநில முதல்வர் களுக்கும் கடிதம் எழுத வேண்டும் என தெரி வித்தார். மேலும், இக்கோரிக்கைக்காக காங்கி ரஸ் கட்சி சார்பில் முதல்வரை சந்தித்து கடி தம் அளிக்க உள்ளதாகவும்,  சிவகாசி  சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலை மையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள தாகவும், அக்குழு அனைத்து மாநில முதல்  வர்களையும் சந்தித்து தீபாவளிக்கு பசுமை பட்டாசு வெடிக்க தடை விதிக்கக்கூடாது என  வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் 9 ஆயிரம் பொதுக்  குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஜன நாயக முறையில் வாக்கு சீட்டு வைத்து  பெட்டி வைத்து தலைவர்  தேர்தல் நடத்  தப்பட உள்ளதாகவும், அதேவேளை, பாஜகவில் இது போன்ற தேர்தல் முறை  இல்லை எனவும், அக்கட்சியில் ஜனநாயக மும் இல்லை எனக் கூறினார்.     சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த பாஜக தலைவர் ஜே.பிநட்டா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்   95 சத வீதம் முடிந்து விட்டதாக பொய் சொல்லிச் சென்றிருக்கிறார். அப்பொய்க்கு  அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வக்கா லத்து வாங்குகிறார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  பூர்வாங்கப் பணிகள் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை என்றார்.

சாலையோரத்தில் குவிந்துள்ள மணலை அகற்றக் கோரிக்கை 

சின்னாளப்பட்டி அக்.6- திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி-  நிலக்கோட்டை இடையே ஆர்சி பள்ளியை அடுத்து நெடுஞ்சாலையோரங்களில் மணல் குவிந்துள்ளது.இத னால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சாலையோர மணலை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வாகன  ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்துவந்த தொடர் மழை காரணமாக மழை நீரில் அடித்து வரப்பட்ட மணல்  நிலக்  கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஆர்.சி.பள்ளியை அடுத்த நெடுஞ்சாலை வளைவுகளில் குவிந்துள்ளது. இத னால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும் நான்கு சக்கர வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் விபத்து  ஏற்படுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.  எனவே சாலையோரம் குவிந்துள்ள மணலை அகற்ற  வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சதுரகிரி மலையில் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை 

திருவில்லிபுத்தூர், அக்.6-  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வனச்சர கத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மலைக்கோயில் அமைந்துள்ளது.  புதன்கிழமையன்று இரவு சதுரகிரி மலைக்கோவில் அருகே பீட்எண் 4 வல்லாளம் பாறை பொட்டுப்பாறை பகுதி களில் திடீரென காட்டுத் தீ பரவியது தகவல் அறிந்து வத்ராப் வனத்துறையினர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் தற்போது  பக்தர்கள் மலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலை யில் காட்டுத் தீயின் காரணமாக மலை ஏறுவதற்கு தடை  வனத்துறையால் விதிக்கப்பட்டுள்ளது மேலும் காட்டுத் தீ அணைந்த பின்னர் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு செவிலியர் மாயம்

திருவில்லிபுத்தூர், அக்.06-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாடவார் வளாகத்தை சேர்ந்தவர் வைரமுத்து(52). இவரது மகள்  திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆம் தேதி  மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர்  போலீ ஸார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

மகளை கொன்று வீட்டு பரணில் சடலத்தை வைத்த  தந்தை கைது

மதுரை, அக் 6-  மதுரை ஜெய்ஹிந்த்புரம்  சோலை அழகு புரம் வ.உ.சி 3 ஆவது  தெருவில் வசித்து வரு பவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி.இவர் களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது, இந்த நிலையில்  செப்டம்பர் 23 ஆம் தேதி  இரவு இவர்களது வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர்  ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 9 வயது சிறுமி தன்ஷிகாவின் கை,  கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழு கிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் கடந்த சில வருடமாக காளி முத்து தனது மனைவியின் நடத்தையில் சந்தே கப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்  பழங்காநத்தம் பகுதியில்  தலை மறைவாக இருந்த காளிமுத்துவை போலீசார் புதனன்று  கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், பிரியதர்ஷினியிடம் காளிமுத்து விற்கு ஏற்பட்டு வந்த தகராறு குறித்து மகளிடம்  புலம்பியதாகவும், அதற்கு மகள், நாம் இருவரும் இறந்து விடுவோம் என்று கூறியதாகவும், இதனை அடுத்து வீட்டின் அடுப்பாங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பரணி மேல் வைத்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாக லாம்  என்று முடிவெடுத்து பயத்தின் காரணமாக  மதுரையில் சுற்றி திறிந்ததாக காளிமுத்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து காளி முத்தை கைது செய்தனர்.

பெயிண்டரை கத்தியால் குத்திய மூன்று பேர் கைது

திருவில்லிபுத்தூர், அக்.6-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சீனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ்(38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  ஆல்வின்(30) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோ தம் இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமையன்று ஆல்வின் தனது  வீட்டருகே தோண்டிய குழியை நன்றாக மூடி விடும் படி அந்தோணி குரூஸ் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இந்நிலையில் ஆல்வின் தனது நண்பர்களான முத்து(27). மாரி யப்பன்(28) ஆகியோருடன் சென்று தகராறில் ஈடுபட்டு அந்தோணி குரூஸை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்தவரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச் சம்பவம் குறித்து அந்தோணிகுரூஸ் கொடுத்த  புகாரின் பேரில் ஆல்வின், முத்து, மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கொலை முயற்சி வழக்கில் திருவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கைது செய்தனர்.

திருவில்லிபுத்தூர் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி

திருவில்லிபுத்தூர்,அக்.6- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே  ஜமீன் கொல்லன்கொண்டான்  ஊரில் வசிப்பவர் கதிரேச  பாண்டியன் (வயது 56). தொழிலதிபரான இவர் பாரதிய  ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருந்தார்.   கதிரேச பாண்டியனும் அவர் மனைவி ராமலட்சுமி யும் மதுரை திருநகரில் உள்ள மகன் அஸ்வின் பொன்  னையா வீட்டிற்கு வந்தனர்.  பின்னர் அங்கிருந்து கார் மூலம்  ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கதிரேச  பாண்டியன் காரை ஓட்டி வந்தார். கிருஷ்ணன் கோவில்  அருகே உள்ள செம்பட்டையன் கால் விலக்கு அருகே  எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது இதில் கதிரேச பாண்டியன் பலத்த காயம் அடைந்து அதே  இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி ராமலட்சுமி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரி ஓட்டுநரான தேனி உத்தமபாளையம் பரமசிவம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இராமநாதபுரத்தில் குடிநீர் வடிகால்  வாரிய ஊழியர் மாநில மாநாடு 

இராமநாதபுரம், அக்.6- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மத்திய  அமைப்பின் பதினோராவது மாநில மாநாடு வருகிற சனி ஞாயிறு தேதிகளில் இராமநாதபுரம் பாரதி நகர் தங்க மஹால் தோழர் கே வைத்தியநாதன் நினைவரங்கில் நடை பெறுகிறது. மாநாட்டுக்கு மத்திய அமைப்பின் தலைவர் எம் பாலகுமார் தலைமை வகிக்கிறார். சிஐடியு மாவட்ட செயலா ளர்  எம்.சிவாஜி வரவேற்று பேசுகிறார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,  மாநில உதவி தலை வர் எம். சந்திரன் ,மத்திய அமைப்பு நிர்வாகிகள் மா ஆத்ம நாதன், வி அழகுமலை ,எம் மலை ராஜன் மற்றும் நிர்வாகி கள் பங்கேற்கிறார்கள் ஞாயிறு அன்று மாலை 5 மணி அளவில் ராமநாதபுரம் வழி விடு முருகன் கோவிலில் இருந்து பேரணி புறப்படும் அரண்மனை முன்பாக பொதுக்  கூட்டம் நடைபெறும்.
 

 

 

;