districts

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7.25 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்படி குடியேறியவர்களில் 3வது பெரிய எண்ணிக்கை இந்தியர்கள்தான் என்று தெரிய வருகிறது. இந்த விபரம் மோடி அரசு, நாங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிற கதைகளை பொய்யாக்குகிறது.   மற்றொருபுறம், இந்திய கிராமப்புறங்களில் மீண்டும் விவசாயத்தை நோக்கி 7 கோடி பேர் மறு இடம்பெயர்வு மேற்கொண்டிருப்பதாக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருள் என்ன? இந்திய நகரங்களில் வேலையின்மை அதிதீவிர நிலையை எட்டியுள்ளது என்பதுதான்.