districts

மதுரை முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்  வாக்குச்சாவடிகள் 1619 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி, செப். 24 தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகள் கூடுத லாக அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1619ஆக அதிகரித் துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 29ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப் பட்டது.  அதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட மன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவ லர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலரால் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் பொது மக்களின் வேண்டுகோளின்படியும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், வாக்குச்சாவடி இடமாற்றம் /பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 வாக்கா ளர் களுக்கு மேல்/ 2 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ள  வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. 10 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்/ கட்டிட மாற்றம் செய்யப் பட உள்ளது. 4 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப் பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 1611  வாக்குச்சாவடி மையங்கள் உள்ள நிலையில் 8 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 1619 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது. ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) அமுதா, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில் பட்டி, அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

வட்டார விளையாட்டுப் போட்டி: செயிண்ட் தாமஸ் பள்ளி சாம்பியன்

தூத்துக்குடி, செப். 24 தூத்துக்குடியில் வட்டார அளவிலான குழு விளை யாட்டுப் போட்டிகளில் செயிண்ட் தாமஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. தூத்துக்குடி துறைமுகம் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட போட்டி களில் வெற்றி பெற்று செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த தினேஷ், உடற்கல்வி எபனேசர் கிரேஸ், பாரிஜா உடற் கல்வி ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் ராயப்பன், பள்ளி முதல்வர் ஆஸ்கர் ஆகியோர் பாராட்டினர்.

4,5 ஆம் வகுப்புகளுக்கு ஒரே மாதிரி  வினாத்தாள்  நடைமுறையை வாபஸ் வாங்குக!   ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருநெல்வேலி, செப். 24- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட நிர்வாகிகள்   மாவட்ட தலைவர் ரமேஸ், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மணிமேக லை, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: தமிழக  அரசு 4,5 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி  வினாத்தாள் அதுவும் தேர்வு நடைபெறும் அன்று காலையில்  வட்டாரக் கல்வி அலுவல கம் வந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஏற்புடை யது அல்ல தமிழக அரசு உடனே இந்த நடைமுறையை வாபஸ் வாங்க வேண்டும். வழக்கம் போல் பள்ளி அளவிலே வினாத்தாட்களை ஆசிரியர்கள் உருவாக்க அனுமதிக்க வேண்டும்,இல்லையெனில் தேசிய கல்விக்கொள்கை -2020ன் படி மாணவர்களை  கல்வித்துறை வருங்கா லத்தில் பொதுத்தேர்வு என்னும் நிலைக்கு கொண்டு செல்லும். மிகவும் ஆபத்தான  இந்த நடைமுறையை தமிழக அரசும், தொடக்கக்கல்வித் துறையும் உடனே  கைவிட வேண்டும் என தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது, இவ்வாற  அதில்  கூறப்பட்டுள்ளது.

சிஐடியு  மாவட்ட மாநாடு  நினைவு ஜோதி வழங்கல்

திருநெல்வேலி, செப் .24- சிஐடியு வின் திருநெல்வேலி மாவட்ட  13ஆவது   மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதையொட்டி சனிக்கிழமை தோழர் செ.கணேசன்  நினைவு ஜோதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலை வர்  நடராஜன் தலைமை தாங்கினார்.  ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் துவக்கி வைத்து பேசி னார். மேலும் இந்த நிகழ்ச்சியில்சிபிஎம் நெல்லை தாலுகா  செயலாளர் நாராயணன்,சிபிஎம்  மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.கே.செந்தில் , சிஐடியு மாவட்ட பொருளாளர் பெரு மாள், மாவட்ட துணை தலைவர் சுடலை ராஜ்,ஏ.டி.சி. வினாயகம், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பி னர்கள் வள்ளிநாயகம், சக்திவேல் மற்றும், சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க தோழர்கள் உள்ளிட்ட ஆட்டோ  தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். களக்காடு அருகே கால்வாயில் 

களக்காடு அருகே கால்வாயில் வலம் வரும் ராஜநாகம்

திருநெல்வேலி, செப் .24- 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான் கால் வாய்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. பகல் நேரங்களிலும் இரை தேடி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ராஜநாகம் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி  வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கால்வாய்களில் குளிக்க வரும் பொதுமக்களும் ராஜநா கத்தை கண்டு அலறியடித்து ஓடுகின்றனர். இதனால் கால்வாய்களில் குளிக்க செல்லும் பொதுமக்களும், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் பீதி அடை ந்துள்ளனர். எனவே இந்த ராஜநாகத்தை வனத்துறை யினர் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில், செப்.24- அரசு தொடக்க, நடு நிலைப்பள்ளி களின் தரத்தை நேரில் சென்று ஊராட்சி தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் விளக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடில்லாதவர்களை கணக் கெடுக்க வேண்டும். இலவச வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான தொகை உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கேட்டுக்கொண்டார். குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று (செப்.23) நடை பெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கி மேலும் பேசியதாவது: தமிழகத்தில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு ஊராட்சி தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். கிராம ஊராட்சிகள் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும், குப்பைகள் இல்லாத கிராமங்கள் உருவாக வேண்டும்.

தெருக்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நம்ம ஊர் சூப்பரு  திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்க ளும் முழு சுகாதார வசதியுடன் இருக்க வேண்டும். பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி  அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப் பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் வளர்ந்துள்ள செடி களை அகற்ற வேண்டும். மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்து தேதியை குறிப்பிட வேண்டும். பொது இடங்களில் குப்பை கள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் குப்பை களை பெறும் போதே தரம் பிரித்து பெற வேண்டும். இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை ஊராட்சி தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான 15ஆவது மாநில நிதிக்குழு பணிகளை திட்டமிட வேண்டும் என ஆட்சியர் கூறினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் முழுவ தும் உள்ள ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகர்கோவில், செப்.24- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2022 ஆம் ஆண்டு அக்டோ பர் 21-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக 3ஆவது தளத் தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய் யப்படாமல் நீண்ட நாட்களாக நிலு வையில் உள்ள குறைகளை தெரி விக்கலாம். அவைற்றை பரிசீலனை செய்வதுடன் அவர்கள் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு செய்திட தொ டர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். மாநில அரசு துறை அலுவலகங் கள், அரசு நிதி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பலன்கள் தீர்வு செய்யப் படாமல் இருந்தால் அவ்விபரங்க ளை இரட்டை பிரதிகளில் 06.10. 2022 பிற்பகல் 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக் குமாறு அனுப்பிவைக்க வேண்டும். 06.10.2022-க்கு பின்னர் வரும் கோ ரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.   ஓய்வூதியதாரர் தங்கள் மனு வில் ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய புத்தக எண். ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர், கோரிக்கை நிலுவையில் உள்ள  அலுவலகம், ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலம் ஆகிய விபரங்களு டன் கோரிக்கையைத் தெரிவிக்கு மாறு ஓய்வூதியதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் கோ ரிக்கை மனுக்கள், மாநில அரசு சார்பற்ற துறைகளில் மற்றும் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மின்சார வாரியம், போன்ற கழகம் மற்றும் வாரியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.

2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம்

திருநெல்வேலி, செப். 24- ராதாபுரம் அருகே விதிமுறையை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கனிம வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரி கள் அடங்கிய குழுவினரால் மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த நிலையில் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறையில் உள்ள கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு  செய்ததில், 2 குவாரிகளில் அரசு விதித்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து, அரசு விதித்த ஆழத்திற்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுத்ததா கவும், அரசு அனுமதி வழங்காத வேறு நிலங்களில் கனிம வளத்தை வெட்டி எடுத்ததாகவும், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதை யடுத்து கல்குவாரிகளின் உரிமையாளர்களான வடக்கன் குளத்தை சேர்ந்த சபரீஷ்லால் மற்றும் அஜேஷ்லால் ஆகிய 2 பேருக்கும் தமிழக அரசு சுமார் ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்

 தென்காசி ,செப். 24 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அமைந்துள்ள மாயமான்குறிச்சி பகுதியை சேர்ந்த ராம சாமி அய்யர் என்பவரின் வாரிசுகளான சுந்தரி, மீனாட்சி,  சங்கரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் வேணுகோபால் ஆகிய ஐந்து நபர்களுக்கும் பாத்தியப்பட்ட 9 கோடி மதிப்பிலான 01 ஏக்கர் 41 செண்ட் நிலம் கிடாரகுளத்தில் ஆலங்குளம் சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள் ளது. இந்நிலையில் ஐந்து நபர்களுக்கும் பாத்தியப்பட்ட நிலத்தை உரிய அனுமதி இன்றியும் வாரிசு சான்றிதழ் இல்லாமலும் தனது அக்கா சுந்தரி அவரது மகனுக்கு ஆவணம் செய்து கொடுத்துள்ளதாகவும் இதைத்தொ டர்ந்து அவரது மகன் நல்லூரை சேர்ந்த வேறொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாகவும் தங்களது நிலத்தை மீட்டு தரும்படியும் வேணுகோபால் கடந்த 20/05/2022 அன்று மாவட்ட காவல் அலுவ லகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்  சந்திச்செல்வி  , சுந்தரி மற்றும் அவரது மகனிடம் துரிதமாக விசாரணை மேற் கொண்டு மேற்படி அனுமதி இன்றி அபகரிக்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரம் ரத்து செய்யப்பட்டது. பின்பு மீட்கப்பட்ட 9 கோடி மதிப்பிலான நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  முன்னி லையில் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

;