districts

img

மலைக்கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளி மரத்தடியில் நடக்கும் வகுப்பு

கடமலைக்குண்டு, ஜுலை 29- தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேக மலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி மலைக்  கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல் பட்டு வருகிறது.  அரசரடி கிராமம் அமைந்துள்ள வனப்பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டு, தற்போது புலிகள் சரணாலய பகுதியாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலை யில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர சரடி கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பகுதி சேதமடைய தொடங்கியது. ஆனால் புலிகள் சரணா லயப் பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளிக்  கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி  தரவில்லை. இதனால் பள்ளிக் கட்டிடம் நாளுக்கு நாள் அதிக அளவில் சேதம டைந்து வந்தது. மழை பெய்யும் நேரங்க ளில் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்  பட்டதால் குழந்தைகளின் கல்வி பாதிப்ப டைந்து வந்தது.  இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளையின் போது குழந்தைகள் அனைவரும் பள்ளி  வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர்.

அப்போது வகுப்பறை கட்டி டத்தின் குறிப்பிட்ட அளவிலான மேற்கூரை பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லா ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று  பார்வையிட்டனர். இருப்பினும் வனத்துறை யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வரு வதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணி கள் மேற்கொள்ள முடியவில்லை . இதனால் கடந்த 2 நாட்களாக குழந்தை களை மரத்தடியில் அமர வைத்து, ஆசிரி யர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக அரசரடி கிரா மத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து  வருகிறது. எனவே தற்போது மழை பெய்யும்  நேரங்களில் மரத்தடியில் அமரவும் முடியா மல் வகுப்பறைக்குள் செல்லவும் முடியா மல் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்  பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுத்து வனத்துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு பள்ளி கட்டிடத்தை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை யெனில் பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.