districts

img

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைத்த வளர்ச்சி திட்டம் தேனி மாவட்டத்தில் 13 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது

தேனி, மே 24-  தேனி மாவட்டத்தில் 13 கிராமங்களில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைத்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரி வித்துள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு முதற்  கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை தமிழக முதல்வர் முக.ஸ்டா லின் (காணொலிக் காட்சி மூலம்) தொடங்கி வைத்த துவக்க விழாவினை தனியார் மண்ட பத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், விவசாய பெருமக்களுடன் பங்கேற்று, பார்வை யிட்டார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறு கையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் நலத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  

இந்த தொகுப்புகளில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், விதை, நாற்றுகள் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதர்களை நீக்கி, நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கமான நிகர சாகுபடி பரப்பு மேலும் அதி கரிக்கப்படும்.  அதன்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்க ளிலும் உள்ள இராஜகோபாலன்பட்டி, மொட்ட னூத்து, திருமலாபுரம் (பந்துவார்பட்டி), அகமலை (சோத்துப்பாறை), சின்னஓவுலாபுரம், ஆங்கூர் பாளையம், தும்மக்குண்டு (வருசநாடு), மேக மலை (குமணந்தொழு), எண்டப்புளி, வடபுதுப்  பட்டி (சொக்கத்தேவன்பட்டி), ஊஞ்சாம்பட்டி (பொம்மையகவுண்டன்பட்டி), லட்சுமிநாயக்கன்  பட்டி மற்றும் டி.மீனாட்சிபுரம் (அழகர்நாயக்கன் பட்டி) ஆகிய 13 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர். தண்டபாணி, வேளாண்மைத்துறை இணை  இயக்குநர் அழகுநாகேந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாண்டி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி யம்மாள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

;