மதுரை, டிச.15- திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை பதிந்த வழக்கை காட்டி மிரட்டி, அவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை; தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல்துறையே விசா ரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.